கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே பெரியவடவாடியில் தனியார் பள்ளிக்குள் அத்துமீறி புகுந்து பலகோடி சொத்துக்களை அபகரிக்க தொழில் துறை அமைச்சர் சம்பத்தின் மகன் மகள் முயற்சி செய்வதாக பள்ளியின் தலைவர் (ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியான டாக்டர் இளவரசன்) குற்றம்சாட்டியுள்ளார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர், டாக்டர் இளவரசன், ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாநில அமைப்பு செயலாளரான இவர் தன் மகன் செந்தில் பெயரில், கல்வி அறக்கட்டளை வைத்துள்ளார். இந்த அறக்கட்டளை சார்பில், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் உள்ள, பெரிய வடவாடி கிராமத்தில், செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கல்வியியல் கல்லுாரி, சுகாதார ஆய்வாளர் கல்லுாரி ஆகியவை நடந்து வருகிறது.

இந்த நிறுவனங்களில், சுமார் 1,700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், தொழில் துறை அமைச்சர், சம்பத்தின் ஆதரவாளர்கள் சிலர், நேற்று முன்தினம் மாலை, அப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, அலுவலக அறையின் பூட்டுகளை உடைத்து, பொருட்களை சேதப்படுத்தியதுடன், அங்கு இருந்தவரை என்பவரை தாக்கியதாகக் சொல்லப்படுகிறது. தகவலறிந்த, டாக்டர் இளவரசனின் ஆதரவாளர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பள்ளி முன் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, அமைச்சரின் மகன் இளவரசன், தன் ஆதரவாளர்களுடன் பள்ளிக்கு வந்தார். அமைச்சரின் ஆதரவாளர்களும் வந்தனர். இரு தரப்பிலும், 200க்கும் மேற்பட்டோர் திரண்டதால், அங்கு மோதல் உருவாகும் சூழல் நிலவியது. இதையடுத்து அங்கு, ஏ.எஸ்.பி தலைமையில், போலீசார் குவிக்கப்பட்டனர்.

பள்ளியை சூறையாடி, அலுவலரைத் சராமரியாக தாக்கப்பட்டதால் பேசவே முடியாத சூழல் இருந்தது.  இதையடுத்து இளவரசனும், அமைச்சர் சம்பத்தும்,  போனில் தொடர்புகொண்டு பேசியதை அடுத்து, அதிமுகவினர் அனைவரும், பள்ளியிலிருந்து வெளியேறினர்.

பின், டாக்டர் இளவரசன் செய்தியாளர்களை சந்திக்கையில்; செந்தில் கல்வி அறக்கட்டளை மூலம், 2005 - -2006ம் ஆண்டு முதல், கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலம் மற்றும் கட்டடத்தின் மதிப்பு, சுமார் 100 கோடி ரூபாய்.  இந்த பள்ளிக்கும், அமைச்சர் சம்பத்துக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. அனால் பள்ளியை அபகரிக்க, அமைச்சர் சம்பத் மற்றும் அவரது மகள், திவ்யா, மகன், பிரவீன்  விலை பேசினர்.  நான் கொடுக்க மறுத்து விட்டேன். இதனால் நேற்று, பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளனர். 

அதிகார பலம்அதிகார பலம் இருப்பதால், 100க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து, பயமுறுத்த பார்க்கின்றனர். நேற்று காலை, போனில் பேசிய, அமைச்சர், சம்பத், எதுவாக இருந்தாலும், 12ம் தேதிக்கு பின், பேசி தீர்த்துக் கொள்ளலாம்' என்றார். பண பலம், அதிகாரத்தை பயன்படுத்தி, பள்ளியை அபகரிக்க முயற்சிப்பதால், முதல்வர் தான், முடிவு செய்ய வேண்டும் இவ்வாறு, இளவரசன் கூறினார்.