Asianet News TamilAsianet News Tamil

பட்ஜெட்டின் மிக முக்கிய அம்சங்கள்!!

few important facts in budget
few important facts in budget
Author
First Published Feb 1, 2018, 3:56 PM IST


2018-2019ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவைகளில் சில முக்கிய அம்சங்கள்:

* வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

* மாத ஊதியதாரர்கள் மருத்துவம் மற்றும் போக்குவரத்திற்கு ரூ.40,000 வரை நிரந்தர கழிவாக பெறலாம்.

* விவசாய பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு ரூ. 2,000 கோடி நிதியுதவி.

* மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பு வட்டிக்கு ரூ.50,000 வரை விலக்கு பெறலாம்

* அனைத்து மூத்த குடிமக்களும், ரூ.50,000 வரை மருத்துவ இன்சூரன்ஸ்களுக்கு கழிவு பெறலாம்

* சௌபாக்யா யோஜனா திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படும்

* உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும்

* அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்

* சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு மானியம் 1.5 மடங்கு அதிகரிக்கப்படும்

* ரயில்வே திட்டங்களுக்கு  ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

* தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறலாம். இதன்மூலம் ஒரு குடும்பம் ஓராண்டுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சுகாதார வசதிகளை பெறலாம். இதன்மூலம் 50 கோடி பேர் பயன்பெறுவர்.

* ஐஐடி மற்றும் என்.ஐ.டி கல்வி நிறுவனங்களில் 18 புதிய கட்டிடக்கலை பிரிவுகள் தொடங்கப்படும். 

* நாடுமுழுவதும் 5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்.

* நாடு முழுவதும் புதிதாக 24 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.

* இலவச மருத்துவ வசதி திட்டத்திற்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப எம்.பி.க்களின் சம்பளம் உயர்த்தப்படும்.

* உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்கும்.

* அரசியல் லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

* 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்.

*  24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios