ஆன்மீகம் என்ற போர்வையில் பள பளக்குப் மேக்கப், கண்ணை பறிக்கும் உதட்டு சாயம். சொகுசு கார் என் பக்கா பிசினஸ் மோடில் வளம் வரும் நிறுவன சாமியார்களுக்கு மத்தியில் விபூதி, திருநீரு, சடைமுடி சகிதம் ஆக்ரோஷமாக ஆடி ஆடு, கோழி ரத்தம் குடித்தல், மாமிசத்தை பச்சையாக சாப்பிடுதல், வேப்பிலையை மென்று சாப்பிடுதல், மஞ்சள் நீர் பருகுதல், ஆணி தைத்த பாதரட்சைகளை அணிந்து ஆடுதல்.
முள் படுக்கையில் ஏறி பெண் சாமியார் ஒருவர் ஆவேசமாக சாமியாட்டம் ஆடி அருள்வாக்கு கூறியது பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கோவில் திருவிழாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அருள்வாக்கு அன்னபூரணி அரசு அம்மா போன்ற போலி சாமியார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவில் திருவிழாவில் சாமியாடிய அந்த மூதாட்டி முள் படுக்கையில் மல்லாந்து விழுந்து அருள்வாக்கு கூறியிருப்பது பலரையும் பரவசத்தில் அழ்த்தியுள்ளது.
சாமியாடுதல் என்பது நகர்ப்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில், திருவிழாக்களில், குல தெய்வ வழிபாடுகளில் தொன்று தொட்டு இருக்கும் ஒரு முறையாகும். இது குறித்து கருத்து கூறும் பலரும் இது முற்றிலும் அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்கின்றனர். ஜோதிடத்தை நம்புவது ஒரு வகை என்றால் இதுபோல சாமி ஆடுபவர்களின் அருள் வாக்கை நம்புவது மற்றொரு வகையாக என்கின்றனர். குலவை சத்தம், பம்பை, உடுக்கை சத்தம் போன்றவற்றை கேட்கும்போதே உணர்ச்சியின் மிகுதியால் துள்ளிக்குதித்து ஆடும் ஒரு நிலைதான் சாமியாடுதல் என கூறப்படுகிறது. மக்களோடு மக்களாக இருக்கும் ஒரு நபர் அந்த சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை தனது அந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கூறுவது அருள் வாக்காக கருதப்படுகிறது. ஆனால் இன்னும் சிலரோ தான் நம்பும் அந்த தெய்வமே அந்த குறிப்பிட்ட சாமியாடியின் மீது வந்திறங்கி வாக்கு கொடுப்பதாக நம்புபவர்களாகவும் உள்ளனர்.

பெரும்பாலும் பெண்களே அதிகம் சாமி ஆடுபவர்களாக உள்ளனர். அடக்கப்பட்ட உணர்வுகள், முடக்கப்பட்ட அலட்சியப்படுத்தப்பட்ட அவரது கருத்துக்கள் மற்றும் அறிவுரைகள் அவற்றை வெளிப்படுத்தும் தருணமாக இதை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதாக உளவியலாளர்கள் பலரும் சாமியாட்டத்தை விமர்சிக்கின்றனர். சிலர் இசையால் உணர்ச்சிவயப்பட்டு, நிலவும் ஒருவித ஆவேச சூழலில் அமைதியாக இருக்க முடியாத வண்ணம் உந்தப்பட்ட நபர் அந்த ஆவேசத்தை வெளிப்படுத்துவதே சாமி ஆடுதல் என்கின்றனர். அவர்கள் ஒரு வித இசை ஆர்வலர்கள் மற்றும் எளிதில் உணர்ச்சி வயப்படுபவர்கள் என்றும் கூறப்படுகின்றனர். பொதுவாக சாமியாடுவது என்பது காலம் காலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வு, நம்பிக்கை, குறி சொல்பவர்களும், சாமி ஆடுபவர்கள் ஊருக்கு ஊர் இருக்கின்றனர். அதெல்லாம் சும்மா ஒரு ஏமாற்று வேலை என்பது பலரின் கருத்தாக உள்ளது. மூடநம்பிக்கை என்பது சிலரின் அபிப்பிராயம், சரியாய் தெரியவில்லை என்பது சிலரின் கருத்து, ஆனால் இதுகுறித்து உறுதியான ஆராய்ச்சிகளோ, அல்லது தீர்க்கமான முடிவுகளோ இதுவரை இல்லை.
வழிபாட்டு முறையில் ஒரு அங்கமாகவும் ஏதோ அரைகுறை நம்பிக்கையாகவுமே இது இருந்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் உளவியல் மருத்துவர்கள் பொதுவாக சாமி ஆடுவது என்பது ஒருவிதமான மனநோய் என்கின்றனர். மனம் அதிகமான ஒரு நம்பிக்கைக்கு உள்ளாகும் போது தன்னை அறியாமல் ஒரு உணர்வில் நம்பப்படுகிற நிகழ்வுதான் சாமியாட்டம் என்கின்றனர். அந்த உணர்வு 2 நொடிகளில் மாறிவிடும் அப்படி மாறாமல் இருந்தால் அது ஒரு மனநோயாக இருக்க வேண்டும் அல்லது போலியாக நடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். சாமியாடுவது குறித்து இப்படி பல்வேறு கருத்துக்கள் உள்ளது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் குல தெய்வ வழிபாடுகளிலும், கிராம தெய்வ வழிபாடுகளும் சாமியாடும்வதும், சாமியாடிகள் கூறும் அருள்வாக்கே கேட்கவும் ஆயிரக்கணக்கில் மக்கள் காத்திருக்கும் முறை ,அதன் மீதான நம்பிக்கை இன்னும் தொன்றுதொட்டு உள்ளது என்பதே நிதர்சனம்.

இதே நேரத்தில் ஆன்மீகம் என்ற போர்வையில் பள பளக்குப் மேக்கப், கண்ணை பறிக்கும் உதட்டு சாயம். சொகுசு கார் என் பக்கா பிசினஸ் மோடில் வளம் வரும் நிறுவன சாமியார்களுக்கு மத்தியில் விபூதி, திருநீரு, சடைமுடி சகிதம் ஆக்ரோஷமாக ஆடி ஆடு, கோழி ரத்தம் குடித்தல், மாமிசத்தை பச்சையாக சாப்பிடுதல், வேப்பிலையை மென்று சாப்பிடுதல், மஞ்சள் நீர் பருகுதல், ஆணி தைத்த பாதரட்சைகளை அணிந்து ஆடுதல். அலகு குத்திக் கொள்ளுதல், கொதிக்கும் எண்ணையில் சர்வசாதாரணமாக கைவைத்தல், கையில் சூடம் ஏற்றுதல், தலையில் தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல், போன்ற சாகசங்களை அனாயசமாக செய்து, அங்கு கூடிநிற்கும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் சாமியாடும் முறைகள் இன்னும் கிராம புறங்களில் நடந்தேறி வருகிறது. இந்த வரிசையில் சிவகங்கை மாவட்டத்தில் பெண் சாமியார் ஒருவர் முள் படுக்கையில் ஏறி ஆடி அருள்வாக்கு கூறியுள்ள நிகழ்வு பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

அதாவது, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கோயில் திருவிழாவில் மூதாட்டி ஒருவர் முற்படுக்கையில் ஆடி அருள்வாக்கு கூறியுள்ளார். லாடனேந்தல் கிராமத்திலுள்ள பூங்காவனம் முத்துமாரி அம்மன் கோவிலில் 45வது மண்டலம் பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இவ் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாகராணி அம்மையார் என்கின்ற பெண் சாமியார் முள் படுக்கையில் ஏறி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். மூதாட்டி ஒருவர் சுமார் 6 மீட்டர் உயரத்திற்கு குவிக்கப்பட்டிருந்த முள் படுக்கையில் மீது ஏறி அனாயசமாக ஆடி அதில் படுத்து அருள்வாக்கு கூறியது அங்கிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாமி அருள் இல்லாமல் இது நடக்காது, அதுவும் வயதான அம்மா இப்படி ஆடுகிறார்,இதுதான் ஓம் சக்தி. ஆனால் அண்பூர்னிக்கு இதெல்லாம் புரியாது. ஏன்னா அது வேறமாரி ஆட்டம் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
