தென் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஒருவரும் அதிமுக பெண் நிர்வாகியும் உரையாடுவதாக ஒரு ஆடியோ பதிவு சமூக வலை தளங்களில் கடந்த 2 நாட்களாக  வைரலாகி வருகிறது. இதில் படு ஆபாசமாக பேசும் அந்த பெண், பல்வேறு அதிமுக பிரமுகர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு பேசுகிறார்.  இந்த உரையாடல் 20 நிமிடங்களுக்கும் மேலாக நீள்கிறது.

தென் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஒருவருடன் அக்கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி ஆபாசமாக பேசுவது போல ஆடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

தென் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ ஒருவரும் அதிமுக பெண் நிர்வாகியும் உரையாடுவதாக ஒரு ஆடியோ பதிவு சமூக வலை தளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாகி வருகிறது. இதில் படு ஆபாசமாக பேசும் அந்த பெண், பல்வேறு அதிமுக பிரமுகர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு பேசுகிறார். இந்த உரையாடல் 20 நிமிடங்களுக்கும் மேலாக நீள்கிறது.

அதிமுக எம்எல்ஏ, அந்த பெண்ணிடம் பேசுவதாக உள்ள இந்த ஆடியோவில், ‘20 வயதில் 3 பெண்கள் வேண்டும்’ என்று கேட்க மறுமுனையில் பேசும் பெண், ‘எதுக்கு’ என்று கேட்கிறார். ‘நண்பர்களுடன் ஜாலியாக இருக்க’ என எம்எல்ஏ பதில் கூறுவதாக உள்ளது. மேலும் அந்த பெண், ‘‘என்ன தூக்கம் வரலயா? படுத்திருக்கேன்.. உன் நினைப்பில்தான் படுத்திருக்கேன். உன்னை தவிர (எம்எல்ஏ பெயரை குறிப்பிட்டு) இந்த உடம்பு யாருக்கும் கிடையாது. ஏடிஎம்கேல எல்லாம் டூப்ளிகேட்டா இருக்கு.. என்னைத்தவிர எதுவும் ஒரிஜினல் இல்லை.

உனக்கு நான் இருக்கேன், வசந்தி இருக்கா.. ஜூம் பண்ணி பார்த்தா நான் உன்னைய பார்க்கிறேன், நீ என்னைய பார்க்குற.. என்ன லுக்கு விட்டுட்டு இருக்கீங்கன்னு அவன் கேக்குறான்.. என்னை புடிச்சிருக்காடா உனக்கு...’’ - இப்படி, இன்னும் எழுத முடியாத அளவிற்கு ஆபாசமாக உரையாடல் நீள்கிறது. இவர்கள் பேச்சில், தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலரது பெயர்களும் பரிமாறப்படுகிறது. மேலும் இப்பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகள் யார் யார், எந்த எந்த பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பது குறித்தும் இதில் விரிவாக பேசி கொள்கிறார்கள். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.