Asianet News TamilAsianet News Tamil

மத்திய அமைச்சர் பதவி..! பேரத்தை தொடங்கியதா திமுக..?

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய திமுகவின் அரசியல் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றது.

Federal Minister... Deal DMK
Author
Tamil Nadu, First Published May 15, 2019, 10:22 AM IST

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய திமுகவின் அரசியல் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றது.

வாக்குப்பதிவுக்கு முன்பு வரை காங்கிரஸ் கூட்டணி தான் என்று தீர்க்கமான முடிவெடுத்து பிரச்சாரத்தில் தூள் கிளப்பி வந்தார் மு.க.ஸ்டாலின். வாக்குப்பதிவு முடிந்த பிறகும்கூட காங்கிரசுடன் கூட்டணி என்பதில் திமுக மிகவும் உறுதியுடன் இருந்து வந்தது. ஆனால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க காங்கிரசுக்கு வாய்ப்பு இல்லை என்கிற தகவல் ஸ்டாலினிடம் அடுத்தடுத்து பகிரப்பட்டது.Federal Minister... Deal DMK

அதிலும் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ் ஆகிய மூவருமே காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க வாய்ப்பே இல்லை என்று ஸ்டாலினிடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக எடுக்க வேண்டிய நிலைப்பாட்டை தீர்மானிக்க வேண்டிய நிலைக்கு தற்போது ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார்.

 Federal Minister... Deal DMK

காங்கிரசுக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதைப்போல் உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் மாயாவதி கூட்டணியும் அதிக தொகுதிகளை வெல்வதற்கு சாத்தியம் இருப்பதாக பேசப்படுகிறது. மம்தா பானர்ஜி மாயாவதி அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு அடுத்து கூடுதல் இடங்களில் வெல்வதற்கு திமுகவிற்கு சாதகமான அம்சம் தமிழகத்தில் நிலவுவதாக கருதப்படுகிறது. Federal Minister... Deal DMK

எனவே மத்தியில் அடுத்து அமைய உள்ள ஆட்சியில் திமுகவின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் நான்கு நாட்கள் வரை காத்திருந்து ஸ்டாலினை சந்தித்து விட்டு ஹைதராபாத் திரும்பினார். அடுத்த நாளே திமுக தலைவர் ஸ்டாலின் தூதுவராக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர மாநில தலைநகர் அமராவதி சென்று சந்தித்துள்ளார். இதுதான் திமுக மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட காரணமாக அமைந்துவிட்டது. Federal Minister... Deal DMK

திமுக எதையும் வெளிப்படையாகக் கூறாமல் மௌனமாக இருப்பதால் இந்த விவகாரத்தை அதிமுக மற்றும் பாஜக ஸ்டாலின் இமேஜை டேமேஜ் செய்ய பயன்படுத்தி வருகின்றனர். தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்து கொண்ட ஸ்டாலின் மூன்றாவது அணி தாவும் அவசரத்தில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார் என்கிற விமர்சனங்களையும் அரசியல் நோக்கர்களும் முன்வைக்கிறார்கள்.  Federal Minister... Deal DMK

இதற்கு ஒருபடி மேலே சென்று சந்திரசேகர ராவ் சென்னை வந்தபோது மத்தியில் திமுக அடுத்து அமைய உள்ள அரசுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் முக்கிய இலாகாக்களை பெற்றுத்தர தான் உதவுவதாக வாய்ப்பு வாக்களித்ததாகவும் அந்த தகவலை சந்திரபாபு நாயுடுவுடன் சென்று துரைமுருகன் கூறி அவர் மூலமாக அதிக அமைச்சர் பதவியை பெற முடியுமா என்று பேரம் பேசியதாக ஒரு தரப்பு தகவலை கிளப்பி விட்டுள்ளது. Federal Minister... Deal DMK

திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோதே மத்திய அமைச்சர் பதவிகளைப் பெறுவதற்கு திமுக பேரம் பேசும் என்கிறார் ஒரு விமர்சனம் உண்டு. அதே விமர்சனம் ஸ்டாலின் தலைமையிலான திமுக மீதும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios