மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ள பொதுமுடக்க தளர்வுகளில் 4.0 இபாஸ் நடைமுறை தேவையில்லை என்று மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு தனிநபரோ, சரக்கு வாகனமோ மாநிலத்துக்குள் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கோ, ஒரு மாநிலத்தில் இருந்து பிற மாநிலத்துக்கோ பயணம் மேற்கொள்ள அரசின் தனிப்பட்ட எந்த அனுமதியோ, ஒப்புதலோ தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு.. பொதுமக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்ள இ- பாஸ் அனுமதி பெறும் நடைமுறை தமிழகத்தில் அமலில் உள்ளது.மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பட்ட உத்தரவு பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நடைமுறையில் தமிழகத்தில் போலி இபாஸ் கொடி கட்டி பறந்தது.இதில் நடந்த  முறைகேடுகளை களைய இபாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் இபாஸ் கிடைக்கும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 
ஆனால் தனிநபர்களோ, சரக்கு வாகனங்களோ மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கோ, வெளிமாநிலங்களுக்கோ செல்ல  இபாஸ் உள்ளிட்ட எவ்வித சிறப்பு அனுமதியும் தேவையில்லை என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.ஆனாலும், இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு கைவிடுவதாக தெரியவில்லை. மாறாக இந்த நடைமுறை தொடர வேண்டுமென்று முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ள பொதுமுடக்க தளர்வுகளில் 4.0 இ பாஸ் நடைமுறை தேவையில்லை என்று மீண்டும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு தனிநபரோ, சரக்கு வாகனமோ மாநிலத்துக்குள் ஒரு மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கோ, ஒரு மாநிலத்தில் இருந்து பிற மாநிலத்துக்கோ பயணம் மேற்கொள்ள அரசின் தனிப்பட்ட எந்த அனுமதியோ, ஒப்புதலோ தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இபாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.