February 21 kamal hassan tour ramnad and Madurai dist

பிப்ரவரி 21 ….. நடிகர் கமல் தொடங்க உள்ள அரசியல் பயண விபரம்

நடிகர் கமலஹாசன் வரும் 21 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தொடங்கும் அந்த பயணத்தைத் தொடர்ந்து மதுரையில் பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

அவரது 21 ஆம் தேதி பயணம் தொடர்பான அட்டவைணையை கமல்ஹாசன் ரசிகர் மன்றம் இன்று வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசனின் பிப்ரவரி மாதம் 21 ஆம் தே சுற்றுப்பயண விவரம்.

காலை 7.45 … அப்துல் கலாம் அவர்களின் இல்லத்துக்கு வருகிறார்

காலை 8.15 .. அப்துல் கலாம் பள்ளிக்கு வருகிறார்

காலை 8.50 … கணேஷ் மகாலில் மீனவர்களை சந்திக்கிறார்

காலை 11.10 .. அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்துக்கு வருகிறார்

காலை 11.20 … அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து மதுரைக்கு கிளம்புகிறார்

நண்பகல் 12.30 .. ராமநாதபுரம் நுழைவாயிலில் பொதுக் கூட்டம்

பிற்பகல் 2.30 … பரமக்குடி 5 முனை சாலை லேனா மகாலுக்கு சற்று முன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம்

பிற்பகல் 3.00 மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக் கூட்டம்

மாலை 5.00 … மதுரை வருகிறார்( ஒத்தக்கடை மைதானம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு எதிரே)

மாலை 6.00 மணி அரசியல் கட்சிக்கொடி ஏற்றுகிறார்

மாலை 6.30 பொதுக் கூட்டம்

இரவு 8.10 முதல் 9.00 மணி வரை கமல்ஹாசன் உரையாற்றுகிறார்.