திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பெரிய பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் என பேசுகிறார் என பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பெரிய பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் என பேசுகிறார் என பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
வருகிற 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பு பொதுக்கூட்டங்களை நடத்த இருக்கிறார். அதன்படி, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் காணொலி காட்சி வழியே இன்று பேசினார். அப்போது அவர், ராமநாதபுரத்தில் குடிநீர் திட்டம் திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் நிறைவேற்றப்பட்டது. திமுகவை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது.
ஆன்மிகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்த்தலாம் என சிலர் நினைக்கின்றனர். மக்களுக்கு சேவை செய்வதுதான் மகத்தான ஆன்மிகம் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். ஏழைகளை காக்க கூடியவர்கள்தான் உண்மையில் ஆன்மிகத்தை நேசிப்பவர்கள். ஏழைகள் முன்னேற்றத்திற்கு உருவாக்கப்பட்ட கட்சிதான் திமுக என அவர் பேசியுள்ளார்.
இந்நிலையில், பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மு.க.ஸ்டாலினுக்கு பெரிய பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் என பேசுகிறார். கடவுள் இல்லை என்று சொன்னால் மக்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்துவிட்டது. நாடாளுமன்ற கட்டடம் அத்தியாவசியமானது. கட்டடம் கட்ட தேவையுள்ளது என கூறியுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 13, 2020, 12:33 PM IST