சசிகலா அணியில் முக்கிய இடம் பிடித்துள்ள மைக் புகழ் சி.ஆர்.சரஸ்வதி உடன் எப்போதும் இணை பிரியாமல் இருந்த பிரபல நடிகையும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு ஓபிஎஸ் அணியில் ஐக்கியாமாகி உள்ளார்.

ஜெயலலிதா உடல் நலம் குன்றி அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட 75 நாட்களும் மருத்துவமனை வாசலிலேயே சி.ஆர்.சரஸ்வதி கோகுல இந்திரா உள்ளிட்ட மகளிரணியினருடன் தரையில் அமர்ந்து தொடர் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்தார் பாத்திமா பாபு.

இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஜெ. மீது இருந்த பற்றின் காரணமாக இந்து கிறிஸ்தவ கடவுள்களையும் வணங்கி வந்தார்.

ஜெயலலிதா உடல்நிலை தொடர்பாக பரபரப்பு புகழ் சி.ஆர்.சரஸ்வதி கொடுத்துவந்த பில்டப் பேட்டிகளின் போது பெரும்பாலும் அவர் உடன் இருப்பார் பாத்திமா பாபு.

இப்படி சசிகலா கோஷ்டியில் சி.ஆர்.சரஸ்வதியுடன் இணைந்து வலம் வந்த பாத்திமா பாபு ஜெ. பிறந்தநாளான இன்று ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆர்.கே.தொகுதியில் அவரது அணியில் ஐக்கியமானார்.

பொதுமக்களுடைய கடுமையான எதிர்ப்பு மற்றும் அதிமுக தொண்டர்களின் கொந்தளிப்பு ஆகியவற்றை நேரில் பார்த்ததால் ஒரு முடிவுக்கு வந்து ஓபிஎஸ் அணியில் ஐக்கியமனதாக திஎரிவ்துள்ளார் பாத்திமா பாபு.

மக்களின் எதிர்ப்பு காரணமாக மேலும் பல சசிகலா தரப்பு பிரமுகர்கள் ஓபிஎஸ் கோஷ்டியில் ஐக்கியமாவர்கள் என பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.