Asianet News TamilAsianet News Tamil

டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்... நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமல்..!

டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Farmers Protest...144 Prohibition Order
Author
Delhi, First Published Jan 26, 2021, 6:12 PM IST

டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுடன் 11 கட்டமாக பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் திட்டமிட்டப்படி விசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தடுப்புகளை மீறி டெல்லிக்குள் விசாயிகள் நுழைந்த நிலையில் விசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்க முயன்றனர். 

Farmers Protest...144 Prohibition Order

இதனால், விசாயிகளுக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், டெல்லியில் வன்முறை வெடித்தது. மேலும், டெல்லி செங்கோட்டையை கைப்பற்றி விசாயிகள் அங்கு விவசாய சங்கக் கொடி ஏற்றப்பட்டது. போராட்டத்தின் தீவிரத்தை தடுக்கும் விதமாக டெல்லியின் முக்கிய சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால், தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

Farmers Protest...144 Prohibition Order

இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios