தமிழக பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவரது அறிவிப்பில், ரூ.10,000 கோடிக்கு பயிர்கடன் வழங்கப்படும். தமிழகத்தில் கடன் ரூ.3.97,495 லட்சம் கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பயிர் காப்பீடு திட்டத்திற்கு 621.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சூரிய சக்தியால் இயங்கும் 2000 பம்பு செட்டுகள் மூலம்ன் நீர்ன் மேலாண்மை மேம்படுத்தப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு 28 ஆயிரத்து 752.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும். வரும் நிதி ஆண்டில் 10 ஆயிரம் கோடி பயிர்கடன் திட்டத்திற்காக வழங்கப்படும். 

அத்திக்கடவு அவினாசிப் திட்டத்திற்கு 1000 கோடி ஒதுக்கப்படும். மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்  உருவாக்கப்படும். கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவாக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஜப்பான் வங்கி ரூ.20,196 கோடி நிதி அளிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிக்கு தமிழக அரசு ரூ.40,941 கோடி நிர்வாக அனுமதி அளித்து உள்ளது’’’’ என அவர் அறிவித்துள்ளார்.