famous Tamil director and politician scolded super star as mental

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது காலா திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், அது தொடர்பாக பிஸியாக இருக்கிறார். இதனிடையே அவரது அரசியல் கட்சி தொடங்கும் விவகாரம் குறித்தும், மேடையில் தோன்றும் போதெல்லாம் ஒரு தகவலை வழங்குவதையும், இப்போது வழக்கமாக்கி இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ரஜினி ஒருமுறை தனது பேட்டியின் போது, நதிகளை இணைப்போம் என பேசியிருந்தார். சமீபத்தில் சீமான் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் அப்போது ரஜினி ”நதிகளை இணைப்போம்” என்று கூறியதை குறித்து கோபமாக பேசியிருக்கிறார்.

அதில் கொஞ்சம் அதிகப்படியாகப் போன சீமான் ரஜினியைப் பார்த்து ”நீ பைத்தியம் என்றால் எங்களை ஏன் பைத்தியமாக்க பார்க்கிறாய்? பைத்தியம்.” என திட்டி இருக்கிறார்.

சீமான் இவ்வாறு ரஜினியை திட்டியிருப்பது, ரஜினி ரசிகர்களை உச்ச கட்ட கோபத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. இதனால் அவர்கள் சீமானை கண்டபடி திட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.