False records of registering Aadhaar details 50000 employees suspended

ஆதார் விவரங்களைப் பதிவு செய்வதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 50 ஆயிரம் ஊழியர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளா

ஆதார்அடையாளஅட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.

இந்த திட்டத்திற்கு முன்னோடி திட்டமாக ஐக்கிய அமெரிக்க நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் எஸ்.எஸ்.என் எனப்படும் சமூக பாதுகாப்பு எண் கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த திட்டம் நந்தன் நீல்கேனிணின் தலைமையில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது.

கண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவமைக்கப்பட்டு 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும்.

இது தொடர்பாக மத்திய அரசு 21 ஜூன் 2016 அன்று வெளியிட்ட அறிக்கையில் மாநில அரசுகள் சாதி, மற்றும் இருப்பிடச் சான்றுகளுடன் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தனி மனிதனின் அதிகாரம் என்ற பெயரில், ஒவ்வொருவரின் ரகசிய அடையாளங்களும் பதிவு செய்யப்படுவதால் தனி மனித சுதந்திரம் பறிபோக வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.

மேலும் வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில் மட்டுமே விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாநிலங்களவையில் பேசிய மத்திய இணையமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், ஆதார் விவரங்கள் பதிவு செய்வதில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவலைவெளியிட்டார்.
இதன் காரணமாக 50,000 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.