கொரோனா வைரஸ் நோயாளிகளை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்து இருப்பதாகவும் ஆனால் தமிழக அரசு அதை ஏற்க மறுக்கிறது எனவும் தொடர்ந்து சமூக வலைதளத்தில் பிரச்சாரம் செய்துவந்த போலி  சித்த மருத்துவர் தணிகாச்சலத்தை போலீசார் இன்று  கைது செய்தனர், கொரோனா வைரஸ் குறித்து உண்மைக்கு மாறாக தொடர்ந்து வதந்தி பரப்பி வந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர் ,  தலைமறைவாக இருந்த அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று  கைது செய்துள்ளனர்.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது  லட்சக் கணக்கான மக்கள் கொரோனாவில்  பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர் . தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது .  இதுவரையில் நாடுமுழுவதும் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி உள்ளது . 

தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாலாயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது ,  சென்னையில் மட்டும் சுமார் 2008 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  இந்நிலையில் உலகம் முழுவதும் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர் .  இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை காலம் பிடிக்கும் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர் ,  அதற்கிடையில் இந்த வைரசிலிருந்து  தற்காத்துக் கொள்ளும் பாதுகாத்துக் அம்சங்களை கடைபிடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் தமிழகத்தில் போலி  சித்த மருத்துவர் என அறியப்பட்ட தணிகாசலம் என்பவர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் கொரோனா வைரஸ் நோயளிகளை  குணப்படுத்த தன்னிடம் மருந்து இருப்பதாகவும் ஆனால் அந்த மருந்தை  அங்கீகரிக்க தமிழக அரசும் இந்திய அரசும் மறுத்து வருவதாகவும் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தார் . 

அதுமட்டுமின்றி மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் நிலையில்  ஏன் இந்த அரசுகள் வேடிக்கை பார்க்கிறது கொரோனா பாதித்த நோயாளிகளை தன்னிடத்தில் ஒப்படைத்தால் தான் அவர்களை குணப்படுத்துவதாக  பிரச்சாரம் செய்து வந்தார் ,  இந்நிலையில் பல சித்த மருத்துவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில போலி மருத்துவரான தணிகாச்சலம் தொடர்ந்து மக்களை திசை திருப்பும் வகையில் பேசி வருகிறார் , கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் ,  உண்மைக்கு புறம்பாக பேசி வரும் அவர் மீது உடனே  நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் கூறினார் ,  இந்தப் புகாரை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தணிகாசலத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர் ,  இதற்கிடையில் போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை கேள்விப்பட்ட தணிகாச்சலம்  கடந்த சில நாட்களாக  தலைமறைவானார் ,

 

ஆனாலும் அவர் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்த நிலையில் அவரை தீவிரமாக தேடி வந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று  காலை கோயம்பேட்டில் பதுங்கியிருந்த அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர் மேலும் அவரை சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த போலீசார்  திட்டமிட்டுள்ளனர் .