பாகிஸ்தானின் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்ததாக வரும் செய்திகள் போலியானவை என தெரிய வந்துள்ளது. அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்ததாக சமூக வலைதளங்களில் போலி செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் இருந்து விடுதலையான விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த 1ம் தேதி அட்டாரி- வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டார். அங்கிருந்து டெல்லி அழைத்துச் செல்லப்பட்ட அவர் ராணுவ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை ராணுவ உய அதிகாரிகளும், மத்திய அமைச்சர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்ததாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலா வந்தது. அந்த செய்தி போலி எனத் தெரிய வந்துள்ளது.

  

இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்தது குறித்து அபிநந்தன் தன்னிலை விளக்கம் அளித்ததாக சமூக வலைதளங்களில் போலி செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதில், ‘’பத்திரிக்கையாளர்களை சந்திக்க எனக்கு அனுமதி கிடையாது. அறிக்கை சமர்ப்பிக்க அனுமதி வாங்கியிருக்கிறேன். பாகிஸ்தான் எல்லைக்குள் நான் இருக்கிறேன் என்பது தெரிந்த உடனே உயிரைக் கொடுத்தேனும் தாய்நாட்டை காப்பேன் என்று பயிற்சி பெறும் போது நான் குடுத்த வாக்குறுதி தான் நினைவுக்கு வந்தது. 

மின்னல் வேகத்தில் செயல்பட்டு என்னிடமிருந்த ஒரு சில ஆவணங்களை ஓடைத்தண்ணீருக்குள் கிழித்து எரிந்தேன். முக்கியமான பேப்பரை என் வாய்க்குள் போட்டு மென்று முழுங்கினேன். தற்கொலை செய்துகொள்ள கூட நேரமிருந்தது. ஆனால், அது என்நாட்டுக்கு அவமானத்தை தரும். சித்திரவதைகளை அனுபவித்தே உயிரிழப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து நான் உங்களிடம் சிறைபட்டேன் என்ற விஷயத்தை மட்டும் எனது நாட்டிடம் கூறி விடுங்கள் என்பதை மட்டும் கூறினேன்.

நான் பாக்கில் சிறைபட்டிருப்பது தெரிந்தால் ராணுவம் அதிரடியாக மீட்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் வழக்கமான சித்ரவதைக்கு பதிலாக எனக்கு ராஜமரியாதை கிடைத்தது. பிறகுதான் புரிந்தது இந்தியா எதோ ஒரு வகையில் நெருக்கடி குடுக்கிறது என்பது. மறுநாள் நான் கூறமறுத்த என் குடும்ப ரகசியங்களை அவர்கள் என்னிடம் கூறியதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இருந்தாலும் என் குடும்பத்திற்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்பதில் திண்ணமாக இருந்தேன். 

அன்று மாலை எல்லாரும் என்னை சுற்றி அமர்ந்து கொண்டு பிரதமரை பற்றிய கேள்விகளை எழுப்பினர். முதலில் பதில் கூற மறுத்தேன். பிறகு அது ராணுவ ரகசியம் இல்லை என்பதாலும் அவரை பற்றி உலகமே அறியும் என்பதாலும் அவரைப்பற்றி எனக்கு தெரிந்ததை கூறினேன். ஒரு சில விஷயங்களை மறைத்தேன். அவர்களின் பிரதான கேள்வியே மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்பது தான். Say to no war hastag பற்றியும் பாக் பிரதமரை இந்திய ஊடகங்கள் புகழ்வதையும் கூறி இந்தியர்களை மிகவும் கேவலமாக விமர்சித்தனர்.நான் பாக்., ராணுவத்திடம் பிடிபட்ட போது கூட அவ்வளவு வேதனையை அடைந்ததில்லை.

 மறுநாள் காலை செஞ்சிலுவை சங்கத்திடம் நான் ஒப்படைக்க படபோகிறேன் என தகவலை கொடுத்தனர். அப்பொழுது ஒரு பாக்., ராணுவ வீரர், உன் மோடியிடம் போய் சொல் இன்று நீ ஜெயித்திருக்கலாம். ஆனால், இனிமேல் நீ நிம்மதியாக உறங்க விட மாட்டோம் என்று சொல்.  அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. போன உயிரை எந்த ஒரு சிறு துன்புறுத்தலும் இல்லாமல் மீட்டுக்கொண்டு வந்தது பிரதமர் மோடியே என்று. நான் சென்ற மிக் விமானத்தை பறிகொடுத்து தேநீர் அருந்தினேன் என்று கூறி கிண்டல் செய்தார்கள்.


 
மிக் விமானத்தின் விலை 15 கோடி ரூபாய். நான் குண்டு வீசி அழித்த பாக் விமானத்தின் F16ன் விலை 250 கோடி என்பதை மனதில் நினைத்து சிரித்து கொண்டேன். 
நான் விடுதலையாக காலதாமதம் ஆனது ராணுவ ரகசியம். அதை வெளியில் சொல்ல இயலாது. நான் விடுதலையாகும் போது பிரதமர் மோடி என்னை வரவேற்பார் அவரை கட்டித்தழுவி நன்றி தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் வராதது சிறு வருத்தமே. இருந்தாலும் உளவுத்துறையின் எச்சரிக்கை காரணமாக அவர் வரவில்லை என்பதை பிறகு தான் அறிந்தேன். நாளையோ அல்லது நாளை மறுநாளோ அவரை சந்திப்பேன்.

 இதோ தாயகம் வந்து விட்டேன். எனக்காக பிரார்த்தித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்பன உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது வரை அபிநந்தன் எந்தவொரு தன்னிலை விளக்கம் அளித்த செய்தியும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.