மதுரையில் போலி பெண் டாக்டர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆங்கில மருத்துவம் பார்த்ததால் அப்பகுதியில் இருந்த மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

மதுரை கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரிமளா (வயது 53). இவர் 10-ம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு ஆங்கில முறை மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். இது குறித்து மதுரை கிழக்கு கிராம நிர்வாக அலுவலர் சேகருக்கு புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர் பரிமளா வசிக்கும் பகுதிக்கு சென்று விசாரித்தார். இதில் அவர் போலி டாக்டர் என்பது தெரிய வந்தது. இது குறித்து கீரைத்துறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் பரிமளாவின் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தி அங்கிருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் பரிமளாவை கைது செய்தனர்.