நடிகர் ரஜினி காந்த் டாஸ்மாக் திறப்பு குறித்து அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என குறிப்பிட்டிருந்தார். இதனிடையே ரஜினியின் கருத்தை முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி ஆதரிப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதை மு.க அழகிரி அதிரடியாக மறுத்துள்ளார்.

 

 


இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் என்று நண்பர் ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கருத்தை நான் ஆதரிப்பது போன்று என் படத்துடன் சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகிறார்கள். அது குறித்து அழகிரியும் அவரது மகனுமான துரைதயாநிதியும் சேர்ந்து என் அப்பாவிற்கு சமூக வலைதளங்களில் எந்த கணக்கும் கிடையாது. அவரது பெயரில் போலியான கணக்கு ஆரம்பித்து இதுபோன்ற கருத்துகளை பரப்பி வருகிறார்கள்.

தவறான கணக்கை தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேட்டியளித்திருக்கிறார் துரைதயாநிதி. இது குறித்து நேற்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தனது பெயரில் உலா வரும் போலி ட்விட்டர் கணக்கு குறித்து நடவடிக்கை எடுக்க மு.க. அழகிரி புகார் அளித்த நிலையில் இன்று மூத்த வழக்கறிஞர் மோகன் குமார் போலீஸ் கமிசனரை சந்தித்து முறைப்படியான மனுவை அளித்துள்ளார். அப்போது போலீஸ் கமிசனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்ததாக தெரிவித்தார் வழக்கறிஞர்.