இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில்  தற்போதுவரை உடன்பாடு ஏற்படாமல் மீண்டும் மாலை பேச்சுவார்த்தைக்கு வர நடைபெற உள்ளதாக கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

இன்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில் தற்போதுவரை உடன்பாடு ஏற்படாமல் மீண்டும் மாலை பேச்சுவார்த்தைக்கு வர நடைபெற உள்ளதாக கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் 4ம் கட்ட பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரே தொகுதியை கேட்பதால் இழுபறி

நீடிப்பதாக கூறப்படுகிறது. இன்று மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் 
எந்த எந்த தொகுதிகள் போட்டியிட வேண்டுமென பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அதில் காங்கிரஸ் கட்சி கேட்கும் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேட்பதால் பேச்சுவார்த்தையில் இழுபறி நிடிக்கிறது. இதனால் அங்கிருந்து வெளியேறிய பாலகிருஷ்ணன் குழுவினர், மீண்டும் இன்று மாலை காங்கிரஸ் கட்சியிடம் பேசிவிட்டு கூறுவதாக திமுக தெரிவித்துள்ளதால் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அவர்கூறினார். 

இதுவரை இச்சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி காட்சிகளுக்கு தற்போது வரை ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் பின்வருமாறு: 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதி:

1) பவானிசாகர் 

2) சிவகங்கை 

3) திருப்பூர் வடக்கு 

4) வால்பாறை -

5) திருத்துறைப்பூண்டி 

6) தளி

மதிமுகக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள்:

1) மதுராந்தகம் (தனி) 

2) சாத்தூர்

3) பல்லடம் 

4) மதுரை மேற்கு, 

5) வாசுதேவநல்லூர் ( தனி), 

6) அரியலூர்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகள்:

1) சூலூர் 

2) திருச்செங்கோடு

3) பெருந்துறை

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒதுக்கப்பட்டுள்ள 3 தொகுதிகள்:

கடையநல்லூர்

வாணியம்பாடி

சிதம்பரம் ஆகும். 

மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகள்: 

1) மணப்பாறை

2) பாபநாசம் 

ஆதித்திமிழர் பேரவைக்கு ஒதுக்கப்பட்ட 1 தொகுதி 

அவிநாசி (தனி)

மக்கள் விடுதலை கட்சி ஒதுக்கப்பட்ட 1 தொகுதி

நிலக்கோட்டை, 

அகில இந்திய பார்வேட் பிளாக் கட்சி ஒதுக்கப்பட்ட 1 கொகுதி

 உசிலம்பட்டி, ஆகும்.