கோடை வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அதன் படி நாளை மற்றும் நாளை மறுதினம் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல், இன்றும் நாளையும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளிலும், புதுவையில் வறண்ட வானிலை நிலவும் என்றும், 
நாளை மறுதினம் தென் தமிழக உள்மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென் தமிழகத்தில் லேசான மழை இருக்கும் போது சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், இன்றும் நாளையும்   வெயிலின் தாக்கம் சற்று குறைபவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த தருணத்தில், மழைக்கான அறிவிப்பு வெளியான அடுத்த தருணமே மக்கள் பெருமூச்சு விட தொடங்கி உள்ளனர்