இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு விடை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் மக்கள் காத்திருக்க இன்னும் சில நிமிடங்களில் எக்ஸிட் போல்கள் மூலமாக குத்துமதிப்பான ஒரு விடை தெரிய வாய்ப்பிருக்கிறது.

லோக்சபா தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப் பதிவும் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் தேர்தல் முடிந்துள்ளதால் இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாக உள்ளது. ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும் முன் நிறைய கருத்து கணிப்புகள் வெளியானது. அக்கணிப்புகள் குறிப்பிட்டு ஒரு முடிவைத் தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமையும் என்று பலரும் எதிர்ப்பார்க்கும் கேள்விக்கு இன்னும் சில நிமிடத்தில் கருத்து கணிப்புகள் பதில் மூலம் ஓரளவுக்கு நெருக்கமான விட தெரிய வாய்ப்புள்ளது. இக்கருத்துக்கணிப்பில் நூற்றுக்கணக்காக நிறுவனங்கள் ஈடுபடும் என்றாலும் ஓரளவு நம்பகத்தன்மை கொண்டவை... 

இந்தியா டுடே- ஆக்சிஸ்
டைம்ஸ் நவ் - விஎம்ஆர் 
ஏபிபி நியூஸ்- சிஎஸ்டிஎஸ்
ரிபப்ளிக் டிவி - ஜான் கி பாட்
ரிபப்ளிக் டிவி- சி வோட்டர் 
இந்தியா டிவி - ஆக்சிஸ் 
டைம்ஸ் நவ் - சிஎன்எக்ஸ்
நியூஸ் 18- ஐபிஎஸ்ஓஎஸ்
நியூஸ் எக்ஸ் - நீடா

இந்தத் தேர்தலில் மோடி வென்று மீண்டும் பிரதமராக பட்சத்தில் தமிழகத்தில் தேவையான தொகுதிகளில் வென்றாலும் கூட அ.தி.மு.க. ஆட்சிக்கு ஆபத்து இருக்கும் என்பதால், தமிழக முடிவுகளோடு சேர்த்து அவர்களது டாடி மோடிக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்யவேண்டிய டபுள் டியூட்டி ஓபிஸ், இபிஸ் வகையறாக்களுக்கு...