Asianet News TamilAsianet News Tamil

பரபர அரசியல் திருப்பம்... பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்..!

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகிய சில மணி நேரங்களிலேயே பஞ்சாப் அமைச்சர் ரசியா சுல்தானா இன்று  அமைச்சரவையிலிருந்து விலகினார்.
 
Exciting political twist ... Minister who resigned from office and shocked ..!
Author
Tamil Nadu, First Published Sep 28, 2021, 7:29 PM IST

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகிய சில மணி நேரங்களிலேயே பஞ்சாப் அமைச்சர் ரசியா சுல்தானா இன்று  அமைச்சரவையிலிருந்து விலகினார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அமரீந்தர் சிங். இவருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதனால், பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சித்துவின் ஆதரவாளர் சரண்ஜித்சிங் சன்னி பொறுப்பேற்றார்.

Exciting political twist ... Minister who resigned from office and shocked ..!

இந்த சூழ்நிலையில் இன்று காங்., தலைவர் பதவியை சித்து இன்று திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து சித்துவுக்கு ஆதரவாக ராஸியா சுல்தானா என்பவர் அமைச்சரவையில் இருந்து விலகினார். முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் கீழ் புதிய பஞ்சாப் அமைச்சரவையில் அவருக்கு நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, அச்சிடுதல் மற்றும் எழுதுபொருள் துறைகள் வழங்கப்பட்டது.  இவர் சமீபத்தில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்த சரண்ஜித்சிங் சன்னி அமைச்சரவையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சராக பதவியேற்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios