Asianet News TamilAsianet News Tamil

பட்டையை கிளப்பிய மோடி & கோ... கோவேக்சினுக்கு வெற்றி...

இந்நிலையில் கடந்தவாரம் ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஜெனிவாவில் WHO தலைவர் டெட்ரோஸ் அதானம் கோப்ரியஸை சந்தித்திருந்தார்.அப்போது கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கையை விரைவு படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். 

Excellent Modi & Co ... Covaxin Victory...
Author
Chennai, First Published Nov 3, 2021, 6:35 PM IST

அவசரகால பயன்பாட்டுக்கு கோவேக்சின் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம் என உலக சுகாதார நிறுவனம் இன்று  ஒப்புதல் வழங்கியுள்ளது. இது கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளதுடன், உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைநிமிர்வாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இந்த வைரஸால் 150க்கும் அதிகமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக கருதப்படுகின்றன. இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. ஆனால் வைரஸை பரப்பிய சீனா சுயநல போக்குடன் நடந்து கொண்டதன் விளைவாக, வைரஸ் பாதிப்பில் இருந்து வேகவேகமாக தற்காத்துக் கொண்டதுடன் இந்த நோய்க்கு தேவையான மருத்துவ உபகரணங்களை சர்வதேச அளவில் விற்பனை செய்து  பன்மடங்கு பொருளாதார லாபம் அடைந்துள்ளது.

அதே நேரத்தில் இந்த வைரஸின் எதிரொலியாக ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், கொத்துக் கொத்தாக மனித உயிர்களும் பறி கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸில் இருந்து மீண்டு வருவதற்கு தடுப்பூசி மட்டுமே சரியான ஆயுதம் என்பதால் அனைத்து நாடுகளும் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியா கோவி ஷூல்டு, கோவேக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து நாட்டு மக்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகிறது.

ஆனால் பல்வேறு காரணங்களால் உலக சுகாதார அமைப்பு கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்காமல் இருந்து வந்தது. ஆனால் தொடர்ந்து கோவேக்சின் இந்திய நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தனர், ஆனால் கோவேக்சின் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கிகாரம் பெறாததால், அந்த ஊசியை செலுத்திக்கொண்ட இந்திய பயணிகளை தங்கள் நாடுகளுக்கும் சில வெளிநாடுகள் அனுமதிக்க மறுத்து வந்தன. இதனால் கோவேக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பயோடெக் நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. நோய்பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் அமெரிக்காவின் பைசர் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசி, பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனேகா என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவி ஷூல்டுக்கு ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது,  ஆனால் சமகால கட்டத்தில் உருவான இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சினுக்கு மட்டும் அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது

இதனால் இந்தியர்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. கோவேக்சினுக்கு அங்கீகாரம் கேட்டு உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், கோவேக்சின்  தொடர்பான கூடுதல்  தரவுகளை சமர்ப்பிக்கும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டது, இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சினின் செயல்திறன் குறித்த தரவுகளை உலக சுகாதார நிறுவனத்திடம் சமர்ப்பித்தது. அதாவது கோவேக்சின்  covid-19க்கு எதிராக 77.8 சதவீத செயல்திறனையும், புதிய டெல்டா மாறுபட்ட வைரஸுக்கு எதிராக 65. 2 சதவீத அளவிற்கு செயலாற்றுவதாகவும்  நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், ஜூன் மாதத்தில் கோவேக்சின் செயல்திறன் பற்றிய இறுதி பகுப்பாய்வு கட்டம் -3 சோதனைகளிலிருந்து பெறப்பட்டதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்தவாரம் ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஜெனிவாவில் WHO தலைவர் டெட்ரோஸ் அதானம் கோப்ரியஸை சந்தித்திருந்தார்.அப்போது கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கையை விரைவு படுத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். அப்போது தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் உலகிற்கு உதவ அடுத்த ஆண்டு 5 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி மருந்துகளை இந்தியா தயாரிக்க உள்ளதாகவும் அவர்   WHO தலைவரிடம் கூறியிருந்தார்.  இந்திய தடுப்பூசிகளை விரைவில் அங்கீகரிக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். இந்நிலையில் கோவேக்சின்  தரவுகளை ஆராய்ந்த உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ குழு, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த  கோவேக்சினை அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ளது. இது  இந்தியாவின் தடுப்பூசி ஆராய்ச்சியில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்பதுடன், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் ஆகியவை இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இரண்டு தடுப்பூசிகள் ஆகும், WHO இதுவரை Pfizer-BioNTech, AstraZeneca-SK Bio/Serum Institute of India, Johnson & Johnson-Janssen, Moderna மற்றும் Sinopharm ஆகியவற்றின் கோவிட்-19 தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரித்துள்ளது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios