அமமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் போனால் போகட்டும் எங்களுக்கு பாதிப்பைல்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

தென் சென்னை தொகுதி மக்களவை உறுப்பினராக போட்டியிட்டவர் திருநெல்வேலியை சேர்ந்த இசக்கி சுப்பையா. முன்னாள் அதிமுக அமைச்சரான இவர், அதிமுக பிளவு பட்டபோது டி.டி.வி.தினகரன் அணியில் இருந்தார். இந்நிலையில் அவர் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவர் கட்சியை விட்டு விலக உள்ளது டி.டி.வி.தினகரன் கூறுகையில், ’’இசக்கி சுப்பையாயா பாதாள சாக்கடை ஒப்பந்தகாரர். தமிழக அரசிடமிருந்து ரூ.70 கோடி பாக்கி உள்ளது, எஸ்.பி.வேலுமணி தொல்லை தாங்க முடியாமல் கட்சியில் போய் சேர்ந்திருப்பார். இசக்கி சுப்பையா பெரிய தலைவரெல்லாம் ஒன்றும் இல்லை. நான் கை காட்டியவர் தான் இசக்கி. யார் சென்றாலும் எங்களுக்கு பாதிப்பில்லை, நிர்வாகிகள் விலகி செல்லச் செல்ல கட்சி பலப்படும்’’ என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.