* ஜனநாயகத்தில் எதிர்ப்பு குரல் எழுப்புவது ஒரு குற்றமல்ல. அவ்வாறு எழுப்பியதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பது என்னுடைய கடமை!-    பிரியங்கா (காங்கிரஸ் பொதுச் செயலாளர்)

* ஒரு கார் அல்லது பேனாவை போல மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்திலும் சில பிரச்னைகள் ஏற்படலாம். ஆனால் அதில் திருத்தங்கள் செய்ய முடியாது. மீண்டும் ஓட்டுச் சீட்டு முறைக்கு மாறுவதற்கான வாய்ப்பு இல்லவே இல்லை. -சுனில் அரோரா ( தலைமை தேர்தல் கமிஷனர்)

* இந்திய ராணுவம் மிகப்பெரிய மாறுதலுக்கு உட்பட்டு வருகிறது. எதிர்கால போர் முறைகளை எதிர்கொள்ள, நம் படை மேலும் வலுப்பட வேண்டும். எண்ணிக்கை அல்ல, தரத்தால் வலுப்பட வேண்டும். -பிபின் ராவத் (முப்படை தளபதி)

* நாம் நூறு வருடங்களாகத் தான் இந்தியர்களாக உள்ளோம். ஆனால் ஆயிரம் வருடங்களாக தமிழனாக இருக்கிறோம். அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால் நான் கூடிய சீக்கிரம் அரசியலுக்கு வந்தாலும் வரலாம் - பார்த்திபன் (நடிகர், இயக்குநர்)

* ஆட்சி பீடத்தை ராஜ்யலட்சுமி என்பர். டில்லியில் மீண்டும் அந்த ஆட்சி பீடத்தை ஆம் ஆத்மி கட்சி பிடித்துள்ளது. அந்த பீடத்தில் தாமரை அமர்ந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் மக்கள் விளக்குமாறை எடுத்து வைத்துள்ளனர். -இல.கணேசன் (பா.ஜ.க.  எம்.பி.)

* தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. மின்னணு ஏற்றுமதியில் இரண்டாமிடத்தில் உள்ளோம். சிறு, குறு நடுத்தர தொழிலில் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளோம். அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் நான்காமிடத்தில் உள்ளோம். அடுத்த ஆண்டு இரண்டாமிடத்துக்கு வந்துவிடுவோம். -எம்.சி.சம்பத் (தமிழக தொழில் துறை அமைச்சர்)

* யோகா, தியானம் மூலம் பயங்கரவாதம், பாலியல் பலாத்காரம், குற்ற சம்பவங்கள் என எதுவும் இல்லாத குற்றமற்ற இந்தியாவை எளிதில் உருவாக்க முடியும். மதம், நிறம், மொழியை கடந்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும் சிறந்த பயிற்சிதான் யோகா. நாள் தோறும் ஒரு மணி நேரம் யோகா செய்யும் போது வலிமை, ஆரோக்கியம் மேம்படும். - பாபாராம்தேவ் (யோகா குரு)

* மரண படுக்கையில் ஜெயலலிதா இருந்த கடைசி மூன்று நாட்களில் மட்டும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆயிரத்து எழுநூறு கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்களை வாங்கியுள்ளனர். இது எவ்வளவு கீழ்த்தரமான செயல். -பெங்களூரு புகழேந்தி 

* தமிழகத்தில் 50 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்களில் 30 சதவீதம் பேர் நடந்தும், சைக்கிளிலும் செல்கின்றனர். சாலைகளில் அவர்களை பாதுகாக்கவும், எளிதாக சைக்கிள்களில் செல்வதற்கு ஏதுவாகவும், உள்கட்டமைப்பு வசதிகளுடன் ‘மாபெரும் சாலைகள் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. -    எஸ்.பி.வேலுமணி (உள்ளாட்சிதுறை அமைச்சர்)

* பா.ஜ.க.வை தேர்தலில் தோற்கடிக்கும் பணியை மற்ற மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் வழங்கிவிட்டதா? இல்லையெனில், நம் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல், ஆம் ஆத்மியின் வெற்றியை ஏன் கொண்டாடுகிறீர்கள்? (என ப.சிதம்பரத்துக்கு நெத்தியடி பதிலடியை தந்துள்ளார்)
-சர்மிஸ்டா (மாஜி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள்)