மக்களவை முன்னாள் சபாநாயகர் சோட்நாத் சட்டர்ஜி மரணம்… உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்!!
கடந்த 2004-ம்ஆண்டுமுதல் 2009 ஆம் ஆண்டு வரை மக்களவைசபாநாயகராகபதவிவகித்தவர்சோமநாத்சட்டர்ஜி. 89 வயதான இவருக்கு கடந்த 25-ம்தேதிமூளையில்செல்லும்ரத்தக்குழாயில்அடைப்புஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்சிகிச்சைபெற்றுவந்தார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவுமீண்டும்ரத்தக்குழாயில்அடைப்புஏற்பட்டுஉடல்நிலைகவலைக்கிடமானது. இதையடுத்து, அவர்அங்குள்ளதனியார்மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அங்குஅவருக்குமருத்துவகுழுவினர்சிகிச்சைஅளித்துவந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணமடைந்தார்.

89 வயதான சோம்நாத் சட்டாஜி 10 முறை எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த இவர் அக்கட்சியில் இருந்து விலகி தனியாக செயல்பட்டு வந்தார்.
பின்னர் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அவரை மீண்டும் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தினார்கள்.

இதையடுத்து கடந்த 2015 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஜோதிபாசுவின் 102-வது பிறந்தநாள் விழாவில் பிமன்பாசு, புத்த தேவ்பட்டாச்சார்யா மற்றும் மூ்த்த தலைவர்கள் முன்னிலையில் சோம்நாத் சட்டர்ஜி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் மீண்டும் இணைந்தார்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நிலையில் இன்று அவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
