தமிழக முதலமைச்சராக வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், வரும் 9ம் தேதி பதவியேற்கவில்லை.

இந்நிலையில் புதுவையின் முக்கிய அரசியல் பிரமுகரும், சில ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இணைந்தவருமான முன்னாள் அமைச்சர் கண்ணன், அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

புதுச்சேரியின் காங்கிரஸ் கட்சி பிரமுகராக வலம் வந்தவர் புதுவை கண்ணன். புதுச்சேரியின் முத்த காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், ரங்கசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்து, ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்பியுமான கண்ணன், சசிகலா முதலமைச்சராக தமிழகத்தில் பொறுப்பேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அதிமுகவில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

கண்ணனின் இந்த திடீர் முடிவு, புதுச்சேரி அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.