அப்பா ஸ்தானத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயரைப் போட்டுக்கூட பெர்த் சர்டிபிகேட் வாங்கமுடியும் என்கிறபோது நாங்கள் நினைத்தால் அப்பா வெற்றிவேல் என்று சர்டிபிகேட் வாங்கமுடியாதா?’ என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள் சில அநாமதேயர்கள்.

 

பர்த்சர்டிபிகேட் பஞ்சாயத்து சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் ஜெயக்குமார் ஃபேன்ஸ் என்னும் பெயரில் உள்ள ட்விட்டர் பக்கம் ஒன்றில் ‘ ஒருவர் பெயரில் பர்த் சர்டிபிகேட் வாங்குவதெல்லாம் பெரிய விஷயமா? அப்பா என்பவர் நேரில் ஆஜராகவேண்டிய அவசியமில்லாத நிலையில், யார் பெயரில் வேண்டுமானாலும் சர்டிபிகேட் வாங்கமுடியும்’ என்று பதிவிட்டுருப்பதோடு, போலி என்றே அறிவித்துவிட்டு ‘அப்பா’ என்ற இடத்தில் வெற்றிவேல் பெயரைப் போட்டு ஒரு பெர்த் சர்டிபிகேட்டையும் வெளியிட்டிருக்கிறார்கள். 

அத்தோடு நில்லாமல், ’தேவைப்பட்டால் எங்களால் வெற்றிவேல் பேசியதைப்போன்ற ஆடியோவையும் வெளியிடமுடியும்’ என்கிறார்கள் அமைச்சர் ஜெயகுமாரின் ஃபேன்ஸ் என்ற பெயரில் இயங்கிவரும் ட்விட்டர்காரர்கள். ஹைய்யோ ஹையோ...