முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சாத்தூர் ராமசந்திரன். இவர் 5 முறை தமிழக அமைச்சராக பதவி வகித்துள்ளார். திமுக ஆட்சியின்போது இவர் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சர் பதவி வகித்தார்.

விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள இவர், நேற்று கட்சி பணிகளை முடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு திரும்பினார். இரவு உணவு சாப்பிட்டு விட்டு உறங்கிய அவருக்கு இன்று அதிகாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதனை அடுத்து, சாத்தூர் ராமசந்திரனை அவரின் உறவினர்கள், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.