பண விநியோகம் குறித்து தன வீட்டிற்க்கே வரவழைத்து குண்டக்க மண்டக்க கேள்விகேட்டு மடக்கியதால், பதிலளிக்க முடியாத வளர்மதி தனது நெருங்கியவர்களிடம் குலுங்கி குலுங்கி அழுதாராம்.

நடந்துமுடிந்த தேர்தலில், தொகுதிக்கு பல கோடி ரூபாய்  விநியோகம் செய்யப்பட்டது.  குறிப்பாக இடைத்தேர்தல் நடந்த 22 தொகுதிகளுக்காக அதிகமாக விநியோகிக்கப்பட்டது. முக்கிய அமைச்சர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகியை நிர்ணயித்தது அதிமுக தலைமை.

பணப்பட்டுவாடா நடந்த சமயத்தில், கோடிக்கணக்கில் பதுக்கிய சம்பவமும் நடந்துள்ளது. இந்த தகவலை உறுதி செய்துகொண்ட எடப்பாடி, காசு மேட்டரை டீல் செய்த நிர்வாகிகளை வேட்பாளருக்கும் செலவுக் கணக்கைத் தலைமையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த வகையில், பல வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் நடந்த தேர்தல் செலவினங்கள் விவகாரம் குறித்து தனித்தனியாக இடப்படியின் கவனத்திற்கு புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் முதல்வரின் கிரீன்வேஸ் ரோடு வீட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர் வளர்மதி சென்னை சுற்றுப்புறத் தொகுதிகளுக்குத் தலைமையால் வழங்கப்பட்ட பணம் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்பது பற்றி தனக்கு வந்த புகார்களை வளர்மதியிடம் கூறி விளக்கம் கேட்டுள்ளார் எடப்பாடி. அதற்கு வளர்மதியோ, என்னுடைய பொறுப்பில் வந்த மொத்தப் பணத்தையும் சால்லிக் காசுக்கூட இல்லாமல் பிரித்துக் கொடுத்துவிட்டேன் என பதில் செவ்ல்லியிருக்கிறார்.

வளர்மதியின் அசால்ட் பதிகளால் கடுப்பான எடப்பாடியார், நீங்க யார் யாருக்கு கொடுத்துங்கன்னு லிஸ்ட் கொடுங்க, நீங்க யார் யாருக்கு கொடுத்துங்கன்னு எல்லா மேட்டரும் எங்களுக்கு தெரியும் என்று சுமார் அரை மணி நேரம் மாறி மாறி கேள்விகளால் செம்ம கோபமாகவே பேசினாராம்.

எடப்பாபடியார் கடுப்பில் குத்தியதால் வாய் திறக்காத வளர்மதி, வீட்டிலிருந்து சொல்லாமல் கூட வெளியே சென்றுவிட்டார். அதன்பின் தனக்கு நெருக்கமானவர்களிடம், நான் இவரைவிட கட்சியில் சீனியர் என்று கூட பார்க்காமல், என்கிட்டயே இவ்வளவு அதிகாரமா நடந்துக்குறாரு என்று சோகத்தில் சொல்லி குலுங்கி குலுங்கி அழுதாராம் வளர்மதி. ஒருவேலை தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்குச் பாதகமாக இருக்கும் பட்சத்தில் வளர்மதி மற்றும் அவரைப்போலவே துட்டு அமுக்கிய பல புள்ளிகள் விசாரணை வளையத்துக்குள் சிக்குவார்கள் என அதிமுக வட்டாரத்தில் தகவள் வெளியாகியுள்ளது.