ex minister valarmathi

’அன்னைக்கு தினகரனுக்கு ஆதரவா ஆர்.கே.நகர்ல தொப்பியோட சுத்துன டீம்தானே நீங்க?’ என்று முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களைப் பார்த்து சி.ஆர்.சரஸ்வதி நாக் அவுட் கொடுத்ததுக்கு வகையாக நோஸ்கட் கொடுத்திருக்கிறார் பா.வளர்மதி. 

இது பற்றி பேசியிருக்கும் வளர் “சுயேட்சைகளையெல்லாம் மக்கள் ஒரு பொருட்டாவே எடுத்துக்க மாட்டாங்க. ஆர்.கே.நகர்ல நிக்குற பத்து பன்னெண்டு சுயேட்சைகளில் ஒருத்தர்தான் தினகரனும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தேர்தல் அப்படின்னா அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இந்த இரண்டையும்தான் மக்கள் பார்ப்பாங்க. 

தினகரனை சாதாரண சுயேட்சையா மட்டுமே பார்ப்பாங்களே தவிர வேற எந்த முக்கியத்துவமும் கொடுக்க மாட்டாங்க. ஓப்பனா சொல்றதுன்னா அவருக்கு வரவேற்பே இருக்காது. இந்த அரசாங்கம் செய்திருக்கிற சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம். அது போக தலைவரும், அம்மாவும் தந்த இரட்டை இலை சின்னம் எங்களோடு இருக்கிறப்ப என்ன கவலை?

இந்த ஆட்சி என்ன சாதனை செய்துடுச்சு?ன்னு கேட்கிறவங்களுக்கு சிம்பிளா ஒண்ணு சொல்றேன்! அம்மா கொண்டு வந்து செயல்படுத்திய திட்டங்கள் அத்தனையும் தொய்வில்லாமல் தொடருதே, அதுவே பெரும் சாதனைதானே! எல்லா தரப்பு மக்களையும் காக்கிற மாதிரியான திட்டங்களைத்தானே அம்மா செயல்படுத்திட்டு இருந்தாங்க. ஆக அதைச் சொல்லி கேட்டாலே எங்களுக்கு நிச்சயம் விழும் வாக்குகள். அதுவும் போக இந்த தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை. அதனால தொப்பிய இழந்த தினகரன் தப்பிப் பிழைக்கவும் வாய்ப்பில்லை.” என்றிருக்கிறார். 

சி.ஆர். சரஸ்வதி அடிச்ச அடிக்கு வலுவான பதிலடியா ஒண்ணும் இது தெரியலையே மேடம்! என்று வளர்மதியிடம் விடாமல் வம்பிழுக்கிறார்கள் விமர்சகர்கள். 

கூடவே ‘அம்மா செய்த சாதனைகள் தொடருதுன்னு சொல்றீங்களே? ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் எங்கே உருப்படியா நடக்குது? பல இடங்கள்ள அம்மா உணவகம் சிதிலமடைஞ்சு போயி நடக்குது, பாலூட்டும் தாய்மார்கள் அறையை பூட்டி பல மாசங்களாகுது, அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அம்மாவின் பெட்டகம் வழங்கப்படுறதேயில்லை, விலையில்லா ஆடுமாடு திட்டங்கள் கண்ணோடேயே காணலை...இன்னும் இப்படி சொல்லிட்டே போகலாம். ஆனா நீங்க கொஞ்சம் கூட இதைப்பற்றி யோசிக்காம, சாதனை திட்டங்கள் தொடருதுன்னு சொல்றதை கேட்டா சிப்புச்சிப்பா வருதுங்க வளர் மேடம்.” என்று சிரிக்கிறார்கள்.