Asianet News TamilAsianet News Tamil

திமுகவுக்கு வர தயாராகிவிட்ட தென் மாவட்டத்தின் முக்கிய புள்ளி... வேலூர் தேர்தலுக்கு பிறகு ஐக்கியமாக முடிவு!

நாடாளுமன்றத் தேர்தலில் சிவங்கங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் காத்திருந்தார். ஆனால், இந்த இரு தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த கண்ணப்பன், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்தார்.

Ex. Minister Raja kannappan will join in DMK very shortly
Author
Chennai, First Published Jul 26, 2019, 7:15 AM IST

 நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவுக்கு எதிராக திரும்பிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன்  திமுகவில் சேர முடிவெடுத்துள்ளார். Ex. Minister Raja kannappan will join in DMK very shortly
 நாடாளுமன்றத் தேர்தலில் சிவங்கங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் காத்திருந்தார். ஆனால், இந்த இரு தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த கண்ணப்பன், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளித்தார். தேர்தலுக்கு பிறகு அமைதியான கண்ணப்பன், மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்.Ex. Minister Raja kannappan will join in DMK very shortly
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜகண்ணப்பன், “ நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ததைப் போல வேலூரிலும் பிரசாரம் செய்ய இருக்கிறேன். வேலூரில் சட்டப்பேரவைத் தொகுதிகள் வாரியாக தேர்தல் பணிக்குழுவை அமைத்திருக்கிறோம். திமுகவில் சேர்வது குறித்து ஆதரவாளர்களுடன் கலந்து பேசி வருகிறேன். அதுகுறித்து வேலூர் தேர்தல் முடிந்த பிறகு முடிவெடுக்கப்படும். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டார். சமீபத்திய தேர்தல் வெற்றி அதை உறுதிப்படுத்திவிட்டது” என்று தெரிவித்தார்.

Ex. Minister Raja kannappan will join in DMK very shortly
அதிமுகவிலிருந்து விலகி மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை நடத்திவந்த ராஜ கண்ணப்பன், 2001-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். பிறகு திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன், 2006-ல் திமுக சார்பில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இடையே திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios