Ex minister p.chidambaram told about mersel

மத்திய அரசின் கொள்கைகளை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம் என மெர்சல் படத்துக்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதை கிண்டல் செய்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் தடைகள் பலவற்றைக் கடந்து தீபாவளியன்று வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. அனைத்து தரப்பினரிடமிருந்தும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், படத்தில் ஜிஎஸ்டி , பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா, மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் மெர்சல் படத்துக்கு கடும் எதிர்ப்வு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் பாஜகவின் கருத்திற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மெர்சல் படத்திற்கு எதிரான சர்ச்சையை விமர்சித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அரசின் கொள்கைகளை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம் என்று தெரிவித்துள்ளார்

Notice to film makers: Law is coming, you can only make documentaries praising government's policies.

— P. Chidambaram (@PChidambaram_IN) October 21, 2017

மேலும் பராசக்தி படம் தற்போது வெளியாகி இருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என எண்ணிப்பாருங்கள் என்றும் சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.