Asianet News TamilAsianet News Tamil

பாலியல் புகாரில் கைதான மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் கிடைக்குமா?... நாளை வெளியாகிறது தீர்ப்பு...!

திருமண ஆசைகாட்டி நடிகையை ஏமாற்றிய புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், நாளை தள்ளிவைத்துள்ளது.

Ex Minister Manikandan arrested in Sexual harassment complaint from Chandini bail case
Author
Chennai, First Published Jun 24, 2021, 3:51 PM IST

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை  அளித்த புகாரின் அடிப்படையில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Ex Minister Manikandan arrested in Sexual harassment complaint from Chandini bail case

இந்த வழக்கில் பெங்களூருவில்  தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் ஜூன் 20ம் தேதி கைது செய்தனர்.இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணிகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மணிகண்டன் தரப்பில், நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கும், தன்னுடன் பழகிய சில நாட்களிலேயே கர்ப்பமானார் என்று கூறுவதற்கும் ஆதாரங்கள் இல்லை என்றும், ஆரம்பகட்ட விசாரணையை முழுமையாக முடிக்காமலும், தன்னிடம் விளக்கம் பெறாமலும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிடப்பட்டது.

Ex Minister Manikandan arrested in Sexual harassment complaint from Chandini bail case

காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர், காவல்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார்.மேலும், தன்னை விட்டுப் போகக் கூடாது என நடிகைக்கு  வாட்ஸ் ஆப்பில் மிரட்டல் விடுத்தது, தன்னுடைய வாட்ஸ் ஆப் எண்ணிலிருந்து நடிகைக்கு போட்டோக்கள் அனுப்பியது, இருவரும் ஒன்றாக தங்கியிருந்தது ஆகியவற்றிற்கான ஆதாரங்கள் சேகரிகரிக்கப்பட்டு, சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Ex Minister Manikandan arrested in Sexual harassment complaint from Chandini bail case

மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிடப்பட்டது.அதேபோல புகார்தாரரான நடிகை சாந்தினி தரப்பில், மணிகண்டனுக்கு  ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நாளை தள்ளிவைத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios