Asianet News TamilAsianet News Tamil

சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே விசுவநாதன் உருக்கமாக கடிதம்..!! போலீசுக்கு சொன்ன அட்வைஸ்..!!

மற்றவர்கள் எவ்வாறு நம்மை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதே போன்று நாமும் மற்றவர்களை நடத்த வேண்டும் என்ற அறிவுரைக்கிணங்க நீங்கள் ஒவ்வொருவரும் நடந்துகொண்ட விதத்தால் காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்த அன்பும் நன்மதிப்பும் பன்மடங்கு பெருகி உள்ளது என்பதை நாம் அறிவோம்.

ex Chennai police commissioner ak vishwanthan letter to Chennai police
Author
Chennai, First Published Jul 2, 2020, 2:12 PM IST

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்து வந்த ஏ.கே விசுவநாதன் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை மாநகரத்துக்கு புதிய காவல் ஆணையராக இதுவரை சென்னை காவல்துறை செயலாக்க பணிகள் ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் பணியில் இருந்து விடைபெற்ற ஏ.கே விசுவநாதன்  சென்னை மாநகர காவல்துறையினருக்கு நெகழ்ச்சி கடிதம் ஒன்று எழுதி உள்ளார் அதன் விவரம்:- என் அன்பிற்குரிய காவல்  அளினர்களே மற்றும் அதிகாரிகளே வணக்கம். கடந்த 3 ஆண்டுகளாக சென்னை பெருநகர காவல்துறையினருடைய சிறப்பான பங்களிப்பு மூலம் சென்னை பொது மக்கள் நம் மீது ஒரு மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

ex Chennai police commissioner ak vishwanthan letter to Chennai police

அதற்கு காவல் ஆளினர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் தங்களுடைய உழைப்பையும் திறமையையும் பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தி உள்ளீர்கள். குறிப்பாக சிசிடிவி உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதன் மூலம் இந்தியாவிலேயே சென்னை பாதுகாப்பான நகரமாக உருவாக்கியதற்கு நீங்கள் சிந்திய வியர்வையை நான் இன்று நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன். நம்மை நாடி வருகின்ற மனுதாரர்களை மற்றவர்கள் எவ்வாறு நம்மை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ அதே  போன்று நாமும் மற்றவர்களை நடத்த வேண்டும் என்ற அறிவுரைக்கிணங்க நீங்கள் ஒவ்வொருவரும் நடந்துகொண்ட விதத்தால் காவல்துறைக்கு பொதுமக்களிடமிருந்த அன்பும் நன்மதிப்பும் பன்மடங்கு பெருகி உள்ளது என்பதை நாம் அறிவோம்.

ex Chennai police commissioner ak vishwanthan letter to Chennai police

தீபாவளி, பொங்கல் விழா மற்றும் சர்வதேச மகளிர் தினம் போன்ற விழாக்களை காவலர்  குடும்பத்துடன் கொண்டாடிய நாட்கள் என்றென்றும் என் மனதில் நிலைத்து நிற்கும், சவாலான பல்வேறு சூழ்நிலையிலும் , கொரோனா காலத்திலும் நீங்கள் முன் வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றி இருக்கிறீர்கள், அதற்கு உங்கள் குடும்பத்தினர் உற்ற துணையாக இருந்துள்ளார்கள் அவர்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறேன். நான் விடைபெறும் நேரத்தில் மீண்டும் உங்களை அதே பொறுப்புணர்வுடனும், கடமை உணர்வுடன், சகோதரத்துவத்துடனும் மக்களை அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்டு சென்னை பெருநகர காவல்துறையின் மாண்பினை வலுப்படுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios