வள்ளுவரின் வரிகளை படித்தவர்களும் புரிந்தவர்களும் அம்பேத்கர் அவர்களையும் பிரதமர் மோடி அவர்களையும் என்றும் மறக்கமாட்டார்கள். அந்த நன்றிவுணர்வுடன் முன்னுரையை எழுதிய இசைஞானியையும் போற்றத் தவறமாட்டார்கள். 

புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தையும், சிந்தனைகளையும் செயல்படுத்துபவர்களையும் நாம் நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி, தொழில்துறை, சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்டவற்றுக்காக மோடி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், அம்பேத்கரின் கருத்தும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய எத்தனிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாக முஸ்லிம் பெண்களின் வாழ்வில் பெரிய அளவிலான மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். அதேபோல, 'பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டமும், பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவெடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. 

இதுபோன்ற மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார். இதனை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளராக கவிஞராக, பாடகராக ஆன்மீகச் செம்மலாகவே இதுவரை கண்டுள்ளேன். தற்போது புளூகிராப்ட் டிஜிட்டல் பவுண்டேசன் வெளியிட்டுள்ள அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்திற்கு இளையராஜா எழுதியுள்ள முன்னுரையை படிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். 

அதன் முதல் பத்தியிலேயே அம்பேத்கரைப்பற்றி அவர் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் நெஞ்சைத்தொட்டன. சமுதாயத்தில் அடிமட்டத்தில் புறந்தள்ளப்பட்ட மக்களின் மானம் காக்க அம்பேத்கர் போராடியதை நாம் அனைவரும் போற்றுகிறோம். அம்கேத்கரின் வழி நின்று அனைத்து வீடுகளுக்கும் கழிவறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற உன்னததிட்டம் கொண்டு வந்து ஏழை ஏளியவரின் மானம் காக்க அம்பேத்கர் உழைத்ததின் முக்கிய வி‌ஷயத்தை பிரதமர் மோடி நனவாக்கியதை நாம் போற்றித்தான் ஆகவேண்டும் என்பன போன்ற அம்பேத்கர் கனவுகளையும் அதை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தியதையும் இதில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

துயரங்களை அனுபவித்து அவற்றை கடந்து தானும் முன்வந்து தன் மக்களையும் முன்னேற்றியவர்களை நன்றியுடன் பார்ப்பது நல்லவர்களின் குணம். காலத்தால் செய்த உதவி ஞாலத்தின் மானப்பெரிது என்றும் எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு என்று எழுதிய நம் ஐயன் வள்ளுவரின் வரிகளை படித்தவர்களும் புரிந்தவர்களும் அம்பேத்கர் அவர்களையும் பிரதமர் மோடி அவர்களையும் என்றும் மறக்கமாட்டார்கள்.

அந்த நன்றிவுணர்வுடன் முன்னுரையை எழுதிய இசைஞானியையும் போற்றத் தவறமாட்டார்கள். இளையராஜாவின் முன்னுரையை களங்கப்படுத்தி கொச்சைப்படுத்துவோரை காணும்போது யானைதன் தலையில் தானே வாரி போட்டுக் கொண்டது தான் நினைவுக்கு வருகிறது’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தந்தை கண்முன்னே படுகொலை செய்யப்பட்ட எஸ்டிபிஐ தொண்டர்.. ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கொலைக்கு பழிக்கு பழியா ?