நேற்று முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் வித்யாசகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாளை சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் எடப்பாடிக்கு எதிராக வாக்களிப்போம் என திருநாவுகரசரின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடபட்டிருந்தது. இதனிடையே திடீரென அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்று முடிவெடுப்பதாக ஒரு கூட்டத்தை கூட்டி பின்னர் முடிவை சொல்லாமலேயே நழுவி விட்டார்.
இதையடுத்து டிவிட்டரில் எடப்படிக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக பதிவு செய்துள்ள தகவலும் பொய்யானது என அதையும் மறுத்துள்ளார்.
மீண்டும் நாளை காலை 9 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கூட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் ஆதரவு யாருக்கு என்பது பற்றிய குழப்பத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது:
அதிமுகவில் திருநாவுக்கரசர் சேருவார் என்றே எனக்கு செய்தி வருகிறது. திருநாவுக்கரசர் சசிகலா ஆதரவாகவே தொடர்ந்து பேசி வருகிறார்.
நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என நினைக்கிறேன். திமுக எடுக்கும் முடிவையே காங்கிரஸ் எடுக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ள நிலையில் திருநாவுகரசர் முரன்பான கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு அவர் அதிமுகவிலேயே இணைந்து விடலாம்.
எடப்பாடிக்கு எதிராக வாக்களிப்பது என ராகுல் காந்தி உடனான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருநாவுக்கரசர் வேண்டுமென்றே திரித்து கூறி வருகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
