இளங்கோவனும், ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள். ரஜினியின் பர்ஷனல் வாழ்க்கையில் இளங்கோவன் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார் என்றால் அதில் மிகையில்லை. எப்படி தெரியுமா?...  

இளங்கோவனின் வீட்டு திருமணத்தின் போதுதான் ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் காதல் வெளியுலகத்துக்கு கசிந்தது. 

இதனால் மட்டுமல்ல அரசியல் உள்ளிட்ட பல நிலைகளில் இளங்கோவனும், ரஜினியும் நெருக்கமாகவே இருந்தனர். ஆனால் சமீப காலமாக இருவருக்குள்ளும் என்ன முறைப்போ தெரியவில்லை. ரஜினியை அநியாயத்துக்கு போட்டுப் பொளக்கிறார் இளங்கோவன். 

சமீபத்தில் கமல், ரஜினியின் அரசியல் மூவ்கள் பற்றி வாய் திறந்திருப்பவர்...“கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தால் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நான் நம்பவேயில்லை. ஆனால் அவர்களால் என்ன தாக்கத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்த முடிகிறது என்பதை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தெரிந்து கொள்ள முடியும். 

ஆனால் இதில விசேஷம் என்னான்னு பார்த்தீங்கன்னா...திடீர்ன்னு அரசியல் நிலைப்பாடு எடுத்த கமல்ஹாசன் சட்டுன்னு கட்சி துவங்கி களமிறங்கிப் போயிட்டே இருக்கார். ஆனால் இந்த தைரியம் ரஜினியிடம் இல்லையே. ரஜினி, பல வருஷமா இந்த கதையை சொல்லிட்டே இருக்கிறாரே தவிர, இதுவரைக்கும் கட்சி தொடங்கலை. 

அவருக்கு உண்மையிலேயே அரசியல் ஆசை இருக்குதா, இல்லேன்னா புதிய படம் வரும்போது வெறும் விளம்பரத்துக்காக இப்படியான விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கிறாரான்னு தெரியலை.” என்று போட்டுப் பொளந்திருக்கிறார். 

இளங்கோவன் ஏன் இப்படி தொடர்ந்து தன்னை தாக்குகிறார்? என்பது ரஜினிக்கு புரியாத புதிராக உள்ளது. அவரிடம், ‘இதன் பின்னணியில் குஷ்பு இருக்கிறார்’ என்று சிலர் ஓதியுள்ளனர். 
அது எந்தளவுக்கு உண்மையோ!?