மீண்டும் ஐசியூவில் ஈவிகேஎஸ். இளங்கோவன்.. என்ன ஆச்சோ ஏதாச்சோ தெரியாமல் கலக்கத்தில் தொண்டர்கள்..!

கடந்த 15ம் தேதி ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

EVKS Elangovan in ICU again.. volunteers shocked

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ். இளங்கோவன் சுமார் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார். 

இதையும் படிங்க;- BREAKING: கொரோனாவில் இருந்து குணமடைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்.. ஆனால் ஐசியூவில் இருப்பார்..!

EVKS Elangovan in ICU again.. volunteers shocked

இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஈவிகேஎஸ். இளங்கோவனுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கொரோனாவில் இருந்து அவர் மீண்டு விட்டதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்,  நான் நலமுடன் இருக்கிறேன். சீக்கிரமா வீடு திரும்புவேன் என்று ஈவிகேஎஸ். இளங்கோவன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். 

இதையும் படிங்க;-  BREAKING: திடீர் மூச்சு திணறல்? வென்டிலேட்டரில் ஈவிகேஎஸ் இளங்கோவன்? அதிர்ச்சியில் தொண்டர்கள்..!

EVKS Elangovan in ICU again.. volunteers shocked

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios