Asianet News TamilAsianet News Tamil

”ஓ.பி.எஸ். மகனிடம் ஓட்டுக்கு 5000 கேளுங்கள்”...பொதுமக்களிடம் போட்டுக்கொடுக்கும் ஈ.வி.கே.எஸ்....

”ஓ.பி.எஸ்.மகன் உங்களுக்கு ஓட்டுப்போடச்சொல்லிக் கொடுக்கும் பணம் அவ்வளவும் மக்களாகிய உங்களிடம் கொள்ளையடித்ததுதான். அதனால் அவர் 5000ரூபாய்க்குக் குறைவாகக் கொடுத்தால் வாங்காதீர்கள்’ என்று மைக்கில் ஓப்பனாக முழங்கி வருகிறார் தேனி மக்களவைத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

evks campaign at theni
Author
Theni, First Published Apr 9, 2019, 1:06 PM IST

”ஓ.பி.எஸ்.மகன் உங்களுக்கு ஓட்டுப்போடச்சொல்லிக் கொடுக்கும் பணம் அவ்வளவும் மக்களாகிய உங்களிடம் கொள்ளையடித்ததுதான். அதனால் அவர் 5000ரூபாய்க்குக் குறைவாகக் கொடுத்தால் வாங்காதீர்கள்’ என்று மைக்கில் ஓப்பனாக முழங்கி வருகிறார் தேனி மக்களவைத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.evks campaign at theni

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும்  தேர்தல் நடைபெற இன்னும் 9 நாட்களே உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். 

அவரை எதிர்த்து துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அதேபோல் அமமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகிறார். தேனியை பொறுத்தவரையில் மும்முனைப் போட்டி நிலவினாலும் இதுவரை வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ரவீந்திரநாத் மூன்றாவது இடத்திலேயே உள்ளார்.evks campaign at theni

இந்நிலையில், தேனி தொகுதிக்குட்பட்ட சேடப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய இளங்கோவன், ”தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஆளும் கட்சியினர் 500 ரூபாய் கொடுத்து வருகின்றனர். அதை வாங்காதீர்கள். அதற்கு பதிலாக ஓபிஎஸ் மகனிடம் ஓட்டுக்கு 5 ரூபாய் ஆயிரம் கொடுங்கள் என கேளுங்கள். 

அவர்கள் கொடுக்கும் பணம் உங்களை ஏமாற்றி கோடி கோடியாய் கொள்ளையடித்ததுதான். இத்தனை நாள் உங்களை எப்படி எல்லாம் ஏமாற்றி இருக்கின்றனர். எனவே ஆளும் கட்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு நாமம் போடுங்கள். பணம் வாங்கி கொண்டு கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். நான் வென்றால் தொகுதியில் அடிப்படை வசதிகள் அனைத்தையும் உடனே செய்து கொடுப்பேன்” என்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios