நக்கல் நையாண்டிக்கு பேர் போனவர் ஈவிகேஸ் இளங்கோவன்.
தமிழக காங். கமிட்டியின் முன்னாள் தலைவரான இவர் தனது அதிரடி கருத்துக்களால் பல பேரின் பகையை சம்பாதித்து கொண்டவர் .
ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி.. கருணாநிதியாக இருந்தாலும் சரி.. அது ப.சிதம்பரமாக இருந்தாலும் சரி நேரடி எதிர் கருத்துக்களை சொல்வதற்கு எப்போதுமே தயங்காதவர் ஈவிகேஎஸ்.
அதிலும் சசிகலா என்றால் சும்மா விடுவாரா இவர்.
தனது சொந்த ஊரான ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன் சசிகலாவின் உடல் மொழி, பாவம், பேசும் வார்த்தைகள் ஒரு பெண் தாதாவை போல் உள்ளது என தெரிவித்தார்.

அவரது இந்த கருத்து பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், "கூவத்துரில் தங்கியுள்ள சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களின் போட்டோகள் மற்றும் வீடியோ இன்று வெளியிடப்பட்டன.
அதில் போட்டோவில் உள்ளவர்களின் எண்ணிக்கையை நன்றாக எண்ணி பார்த்துவிட்டேன். மேலும் சசிகலாவோடு அமர்ந்து கையை தட்டி கொண்டே இருந்த எம்எல்ஏக்களின் வீடியோவையும் பல முறை பாஸ் செய்து பாஸ் செய்து (நிறுத்தி) எண்ணி பார்த்து விட்டேன். 89க்கு மேல் தேறவில்லை.

சந்தேகமிருந்தால் நீங்களே எண்ணி பார்த்துகொள்ளுங்கள் என செய்தியாளர்கள் தெரிவத்தார்.
தங்களிடம் 127 எம்எல்ஏக்கள் உள்ளார்கள் சசிகலா எண்ணிப்பார்க்க சொன்ன வேலையில் ஈவிகேஎஸ் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
