Asianet News TamilAsianet News Tamil

எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு.. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கிளர்ச்சி வெடிக்கும்.. ராகுல் எச்சரிக்கை

ஜனநாயக முறையிலான போராட்டங்களை ஒடுக்குவதற்கும் ஒரு எல்லை உண்டு, இந்த ஒடுக்குமுறை தொடர்ந்தால், ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் கிளர்ச்சி வெடிக்கும் என எச்சரித்தார்.

Everything has a limit .. unimaginable rebellion will erupt .. Rahul warns
Author
Chennai, First Published Oct 6, 2021, 11:58 AM IST

ஜனநாயக முறையிலான போராட்டங்களை ஒடுக்குவதற்கும் ஒரு எல்லை உண்டு, இந்த ஒடுக்குமுறை தொடர்ந்தால், ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் கிளர்ச்சி வெடிக்கும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். என்னையும் என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகதான் நிற்போம் என்றும், உத்திரப்பிரதேச விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நியாயம் தான் கேட்கிறோம் என அவர் உருக்கமாக பேசியுள்ளார். 

Everything has a limit .. unimaginable rebellion will erupt .. Rahul warns

இதை படிங்க : அக்டோபர் 8 ஆம் தேதி போராட்டம் நடந்தே தீரும்.. திமிறும் திருமாவளவன்.. முதலமைச்சருக்கு நெருக்கடி.

உத்திரபிரதேசம் லக்கிம்பூர் மாவட்டத்தில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்க சென்றபோது அங்கு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், அமைச்சர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் கண்மூடித்தனமாக நுழைந்தது அதில் நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள, குடும்பத்தை சந்திக்க சென்றபிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டு 58 மணி நேரமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க 3 பேர் கொண்ட குழுவாக செல்ல போவதாக ராகுல்காந்தி அறிவித்திருந்தார். 

Everything has a limit .. unimaginable rebellion will erupt .. Rahul warns

இதை படியுங்க: வீட்டுக்குள் நுழைந்து சாவியை எடுத்து காரை ஓட்டிச் சென்ற திருடன்.. 3 ஆயிரத்திற்காக கைவரிசை .. பகீர் வாக்குமூலம்

ஆனால் அதற்கு உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்திவிட்டது. அந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ஒட்டுமொத்த நாட்டையும் பாஜக- ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. விவசாயிகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை, விவசாயிகளுக்காக  என்னையும் என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக தான் இருப்போம்,  லக்னோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி லக்கிம்பூர் வராதது ஏன்? எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தினால் தான் இந்த அளவுக்குகூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று இந்தியாவில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது, விவசாயிகளை கார் ஏற்றி கொன்றதில் மத்திய அமைச்சரின் மகனின் பெயர் உள்ளது. 

Everything has a limit .. unimaginable rebellion will erupt .. Rahul warns

அவர் மீது இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை,ஞனநாயகத்தை நிலைநாட்டவே நாங்கள் போராடுகிறோம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். ஆனால் பாஜக தடுக்கிறது. ஜனநாயக முறையிலான போராட்டங்களை ஒடுக்குவதற்கும் ஒரு எல்லை உண்டு, இந்த ஒடுக்குமுறை தொடர்ந்தால், ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரும் கிளர்ச்சி வெடிக்கும் என எச்சரித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உ.பி மாநில அரசு தடைவிதுத்துள்ள நிலையில் தடையை மீறி லக்கிம்பூர் செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios