17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அண்ணாமலை. 17 மாநிலங்களில் ஆட்சியில இருந்தாலும் தமிழ்நாட்டில கூப்புல தானே உட்கார வச்சு இருக்கோம்

கல்லூரி மாணவன் மணிகண்டன் மரணம் குறித்து ஊடகங்கள் மீதும் , காவல்துறை மீதும் மாரிதாஸ் குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தார், இந்நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 ராணுவ அதிகாரிகள் மறைவை சமூக வலைதளங்களில் சிலர் அவதூறாக பதிவிடுவதை குறுப்பிட்டு திமுக, திகவினரில் சிலர் அவ்வாறு பதிவிடுவதாக குற்றம் சாட்டி மாரிதாஸ் பதிவிட்டுள்ளார். ஆனால் அதற்கு முன் தமிழகத்தை காஷ்மீருடன் ஒப்பிட்டு பிரிவினைவாத காஷ்மீர்போல் தமிழகம் மாறுகிறதா என்ற அடிப்படையில் கருத்தை பதிவிட்டிருந்தது சர்ச்சையானது.

இந்நிலையில், மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, மதுரை புதூர் சூரியா நகரை சேர்ந்த யூடியூபரும், பாஜக ஆதரவாளருமான மாரிதாஸை பொது அமைதியை சீர்குலைத்தல், தமிழக அரசு மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மாரிதாஸின் கைது பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாரிதாஸ் மீது 3வதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதனை தடுக்கும் வகையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பேசிய திராவிடர் போர்வையில் ஒளிந்துள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

 மத்திய அரசுக்கு எதிராக மோடியை கொலைகாரராக சித்தரித்து வீடியோக்களை சமூக ஊடகங்களில் உலவவிடும் திமுக அனுதாபி சுந்தரவள்ளியை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் குரல் எழுப்பி வருகின்றனர். 

​சுந்தரவள்ளி பேசிய ஒரு வீடியோவில், ‘’நமது எமோஷனலை வைத்து தான் ஓட்டுக்களை அறுவடை செய்து கொண்டு இருக்கிறார் நம்ம மோடிஜி. இந்த எமோஷனலான ஃபீலை உருவாக்கவே ராணுவத்தினர் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்படுகிறார்கள். ராணுவ வீரர்களின் பிணத்தை வைத்துக் கொண்டு தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிறார் மோடி. ஏதாவது பிரச்னை மோடிக்கு வந்தால் அதில் மோடி ஜெயிக்கணும். அதுக்கு மக்களை தூண்டி விடனும். மக்களை திசை திருப்பணும். இதுல எது நடந்தாலும் ராணுவ வீரர்களை கொல்லணும். இதுதான் மோடி ஃபார்முலா’ என அவர் பேசிய வீடியோக்களை பகிர்ந்து சுந்தவள்ளியை கைது செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 

Scroll to load tweet…
Scroll to load tweet…

இந்நிலையில், '’17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, அண்ணாமலை. 17 மாநிலங்களில் ஆட்சியில இருந்தாலும் தமிழ்நாட்டில கூப்புல தானே உட்கார வச்சு இருக்கோம்’’ என மீண்டும் எகிறி அடித்திருக்கிறார் சுந்தரவள்ளி.!