Asianet News TamilAsianet News Tamil

14ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறந்தாலும் அதிர்ச்சி... மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு..!

மதுபானங்களின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. 

Even though Tasmac stores will open on the 14th, it will be a shock ... the decision to increase the price of liquor ..!
Author
Tamil Nadu, First Published Jun 10, 2021, 6:14 PM IST

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததால் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாகவும் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் ஊரடங்கு மேலும் ஒரு வார காலம் நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகிவருகிறது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 14ஆம் தேதி காலையுடன் முடிவுக்குவரும் நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து இன்று முதல்வர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Even though Tasmac stores will open on the 14th, it will be a shock ... the decision to increase the price of liquor ..!

இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் ஊரடங்கை தொடர்ந்து நீட்டிக்க வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் பாதிப்பு அதிகரிக்கும் மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் மேலும் பல தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். குறிப்பாக அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு அனுமதியளிக்கப்படலாம், டாஸ்மாக் உட்பட அனைத்துக் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதியளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த தளர்வுகள் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு வழங்கப்படாது என்றும் கூறுகின்றனர். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Even though Tasmac stores will open on the 14th, it will be a shock ... the decision to increase the price of liquor ..!

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததால் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நேரக்கட்டுப்பாட்டுடன் டோக்கன் முறையில் டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது.   கொரோனாவால் பலத்த பொருளாதார நெருக்கடியில் தமிழக அரசு சிக்கித்தவிப்பதால் கடந்த ஆண்டைப்போலவே மதுபானங்களின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 180 மில்லி முதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை 20 ரூபாய் கூடுதலாக உயர்த்தப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios