Asianet News TamilAsianet News Tamil

இந்த 14 மாவட்ட மக்களும் கொஞ்சம் உஷாராக இருக்கனும்..!! அடுத்த 24 மணி நேரத்தில் தாக்குதல் இருக்குமாம்..!!

மேலும் நாளை தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Even if the people of these 14 districts are a little alert .. !! There will be an attack in the next 24 hours
Author
Chennai, First Published Oct 16, 2020, 1:15 PM IST

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில்  தமிழகத்தின் வடமாவட்டங்களில் குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் நாளை தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Even if the people of these 14 districts are a little alert .. !! There will be an attack in the next 24 hours

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசிஸையும் ஒட்டு பதிவாகக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார் (கோவை) பாபநாசம் (திருநெல்வேலி) வால்பாறை (கோவை) தலா 3 சென்டி மீட்டர் மழையும், பெருஞ்சாணி (கன்னியாகுமரி) பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) சித்தாறு(கன்னியாகுமரி) தென்காசி (தென்காசி) சோலையார் (கோவை) தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. வருகிற 19ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி  உருவாக்கக்கூடும், இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக அக்டோபர் 18ஆம் தேதி அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Even if the people of these 14 districts are a little alert .. !! There will be an attack in the next 24 hours

அக்டோபர் 19 ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அக்டோபர் 20ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், எனவே மீனவர்கள் அப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 16-10-2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 2.2 முதல் 3.2 மீட்டர் வரை எழும்பக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios