Asianet News TamilAsianet News Tamil

அமித்ஷாவுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் எழுதிய அதிரடி கடிதம்..!! மனித உரிமைகளை காப்பாற்ற கோரிக்கை..!!

இந்தியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம்சாட்டியுள்ளது

Europe parliament warning amith sha and Indian government
Author
Delhi, First Published Jun 3, 2020, 7:52 PM IST

இந்தியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம்சாட்டியுள்ளது இது தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்ற மனித உரிமைக் குழுவின் தலைவர் மரிய அரினா, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார் அதில்,  அன்புள்ள அமைச்சர் அவர்களுக்கு... உலகெங்கிலும் உள்ள மனித உரிமை மேம்பாடுகளை தீவிரமாக கண்காணித்து அடிப்படை உரிமைகளுக்கு ஆதரவாக பகிரங்கமாக வாதிடும் ஒரு நாடாளுமன்ற அமைப்பாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சார்பில் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்,  நாங்கள் இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்களின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஆனந்த் டெல்டும்ப்டே மற்றும் கவுதம் நவ்லக ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பு சமீபத்தில் கைது செய்தது குறித்து எங்கள் கவலையை வெளிப்படுத்துகிறோம். மனித உரிமை ஆர்வலர்கள் இந்தியாவில் மிரட்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் மனித உரிமை ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. 

Europe parliament warning amith sha and Indian government

குறிப்பாக இந்தியாவில் ஏராளமான ஓரம் கட்டப்பட்ட ஏழ்மையான ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவது கவலைக்குரியது, மேலும் அவர்கள் மீது உபா( Unlawful activitis prevention act)சட்டம் அவர்கள் வாயை அடைக்க பயன்படுத்துகிறது. இது சர்வதேச மனித உரிமைகளை மீறும் செயல் என்பதை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டங்கள், கொள்கைகள் உள்ளிட்ட அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிரான பல்வேறு வகையான நியாயமான, அமைதியான போராட்டங்கள் இந்த சட்டத்தின்கீழ் பயங்கரவாத நடவடிக்கைகளாக சித்தரிக்கப்படுவதை ஐரோப்பிய நாடாளுமன்றம் கவனித்து வருகிறது. இதுவரை மனித உரிமை ஆர்வலர்கள் சபுரா சர்க்கர், குல்பிஷா பாத்திமா, காலித் சைபி, மீரான் ஹைதர், ஷிபா-உர்- ரஹ்மான், டாக்டர் கபில் கான் ஆகியோர் மீதான நடவடிக்கைகள் மற்றும் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஆசிப் இக்பால் மற்றும் ஷர்ஜில் இமாம் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைளும் குறிப்பிடத்தக்கதாகும். 

Europe parliament warning amith sha and Indian government

மனித உரிமைகளில் பாதுகாவலர்களின் பணிகளை அதிகப்படியான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் தடை செய்வதையும், அவர்களை குற்றவாளிகளாக்குவதை தடுத்து நிறுத்தவும், அவர்களின் கருத்து சுதந்திரங்களை மதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். ஐக்கிய நாடுகள் அவை இந்த காலத்தில் தேவையற்ற கைதுகளை தவிர்க்க வேண்டுமெனவும், ஏற்கனவே சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும், உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதுகுறித்து மனித உரிமைகள் தொடர்பான துணைக் குழுவின் 2020 மே 11 அன்றைய கூட்டத்தில் பேசப்பட்டது. மனித உரிமைகளை பாகுபாடு இன்றி பாதுகாப்பது நமது முக்கியமான கடமை மற்றும் பொறுப்பு என்று நாங்கள் நம்புவதால், இந்த நடவடிக்கைகளில் இந்தியாவும் சேர்ந்து ஐநா வழிகாட்டுதல்களையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.  இப்போது மனித உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்த்து, தொற்று நோய்க்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கான அனைத்து வழிகளிலும் ஈடுபடுவது அவசியமான தேவையாகும். எனவே இந்த துணைக்குழு இந்தியாவுடன் ஒரு திறந்த உரையாடலை நடத்த விரும்புகிறது, மேலும் இந்தியா தனது ஒத்துழைப்பு மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலம் மனித உரிமைகளை பாதுகாப்பதில்  முன்னேறும் என எதிர்பார்க்கிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் மரியா அரினா கூறியுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios