Asianet News TamilAsianet News Tamil

இந்து மதம் குறித்து அவதூறு பேச்சு ! மத போதகர் எஸ்றா சற்குணம் மீது வழக்குப் பதிவு !!

இந்து மதத்தையும், இந்துக்களையும் அவதூறாக பேசியதாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் மீது பா.ஜனதா கட்சியின் மயிலாடுதுறை நகர தலைவர் மோடி கண்ணன், மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

esra srgunam case file
Author
Mayiladuthurai, First Published Jun 21, 2019, 9:40 PM IST

பா.ஜனதா கட்சியின் மயிலாடுதுறை நகர தலைவர் மோடி கண்ணன், மயிலாடுதுறை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் , கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார்.

esra srgunam case file

இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அதில் ‘இந்து மதமே இல்லை, இந்துக்களை முகத்தில் குத்தி காயப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 

esra srgunam case file

அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios