பொதுச்செயலாளர் என்று அறிவித்தால் இபிஎஸ் கண்டிப்பாக ஜெயிலுக்கு போவார்.. ஓபிஎஸ் ஆதரவாளர் பகீர்..!
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவுகளை அறிவிக்க வேண்டாம். ஏப்ரல் 11ம் ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை முன்கூட்டியே மார்ச் 22ம் தேதி விசாரிக்கப்பட்டு, மார்ச் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை தள்ளிப் போட்டதே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவுகளை அறிவிக்க வேண்டாம். ஏப்ரல் 11ம் ஒத்திவைக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை முன்கூட்டியே மார்ச் 22ம் தேதி விசாரிக்கப்பட்டு, மார்ச் 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், ஓபிஎஸ் இல்லம் அருகே அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் ஈடுபட்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி;- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான முடிவை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை தள்ளிப் போட்டதே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான். நீதி, நேர்மை எங்கள் பக்கம் தான் இருக்கிறது.
ஓபிஎஸ் கட்சி தொண்டர்களுக்காகவே உள்ளார். நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று இனியாவது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வேண்டும். இபிஎஸ் இதுபோன்ற கேவலமான புத்தியை கைவிட வேண்டும். ஓபிஎஸ்யிடம் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். ஓபிஎஸ் பலம் என்ன என்பது குறித்து திருச்சி மாநாடு பதில் சொல்லும். பொதுச்செயலாளர் என்று அறிவித்தால் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக ஜெயிலுக்குதான் போவார். பொதுச்செயலார் பதவிக்கும் உனக்கும் செட் ஆகாது. ஏற்கனவே பொதுச்செயலாளர் என்று கூறியவர் நிலைமையை பார்த்திருப்பீர்கள் என்றார்.