நாம் பெற்ற பிள்ளைக்கு திமுகவினர் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.. இதுதான் ஸ்டாலின் சாதனை- விளாசும் இபிஎஸ்
திமுக தலைவராக கருணாநிதி இருந்தார். அவருக்கு பிறகு ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார். ஸ்டாலினுக்கு பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இப்போது முன்னிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி அது கட்சி அல்ல என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மக்கள் தான் தங்களது குழந்தை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம், தாதகாப்பட்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக பல்வேறு சோதனைக்கிடையிலும் கண்ணின் இமைபோல் காத்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் தலைவர்களுக்கும் வாரிசு கிடையாது. மக்கள் தான் தங்களது குழந்தை என்று வாழ்ந்தவர்கள் அவர்கள். அதனால்தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில எட்டப்பர்கள் தீய சக்தி திமுகவுடன் இணைந்து இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்தனர். ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த ஆட்சியை கலைப்பதற்கு எதிர்த்து வாக்களித்தார்கள். அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி அதிமுக. நானும் தொண்டனாக இருந்து பல்வேறு பொறுப்புகள் பெற்று இன்று பொதுச் செயலாளராக உள்ளேன். சாதாரண தொண்டன் கூட பொதுச் செயலாளர் ஆகும் ஒரே கட்சி அதிமுக தான். சாதாரண ஒரு தொண்ட ன் நாடாளுமன்ற உறுப்பினர் முதலமைச்சராக கூட அதிமுகவில் தான் ஆக முடியும்
திமுக தலைவராக கருணாநிதி இருந்தார். அவருக்கு பிறகு ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார். ஸ்டாலினுக்கு பிறகு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இப்போது முன்னிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றனர். அதனால்தான் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி அது கட்சி அல்ல, கட்சி என்றால் அது அதிமுக தான். திமுகவில் ஸ்டாலினுக்கு பிறகு கட்சியை சேர்ந்தவர்களில் இவர்தான் அடுத்த தலைவர் அடுத்த முதலமைச்சர் சொல்ல முடியுமா? திமுகவில் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக கட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின்
வெள்ள நிவாரண தொகை கிடைக்கவில்லை என்று தினமும் பேசி வருகின்றனர். திமுக மற்றும் கூட்டணி கட்சியின் சேர்த்து 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் அவர்கள் மூலம் நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராடி இருந்தால் உரிய நிதியை வாங்கி இருக்கலாம். 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 வருட காலத்தை வீணாக கழித்து விட்டனர். இதே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது காவிரி பிரச்சனைக்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் 37 பேர் 22 நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசி நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்த கட்சி அதிமுக.
அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரி தந்தோம், ஆயிரம் கோடியில் கால்நடை பூங்கா தந்தோம், பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ கல்லூரி, சட்டக் கல்லூரி தந்தோம், அதிமுக கொண்டு வந்த 11 மருத்துவக் கல்லூரியையும், சட்ட கல்லூரியும் திமுகவை திறந்து வைத்து வருகின்றனர். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர்கள் பெயர் வைத்துக் கொள்கிறார்கள். இதுதான் திமுகவினர் சாதனை. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் சூப்பர் முதலமைச்சர் ஸ்டாலின். ஊழல் செய்வதில் நம்பர் ஒன் மாநிலம் தமிழகம். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு திமுக அரசு தான்.
ஒப்பிட்டு பாருங்கள் எந்த ஆட்சி சிறந்தது
தமிழகத்தில் தான் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் முதலமைச்சராக உள்ளனர் தமிழ்நாடு முன்னேறுமா.? திமுக ஆட்சி முடிவதற்குள் 10 லட்சம் கோடி கடன் வாங்கி விடுவார்கள். இந்த கடனை மக்கள் தான் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் வரிகள் இல்லை, பத்திரப்பதிவு வரி உயர்த்தப்படவில்லை. திமுக ஆட்சியில் வரிகள் உயர்த்தப்பட்டு வருவாய் அதிகரிக்க நிலையும் கடன் அதிகமாக வாங்கி வருகின்றனர். காரணம் என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அதிமுக ஆட்சியின் திமுக ஆட்சியும் ஒப்பிட்டு பாருங்கள் எந்த ஆட்சி சிறந்தது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
இப்போது உள்ள திமுகவின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9695 கேள்விகள் தான் கேட்டனர். அதிமுக எம்பிக்களை விட திமுக எம்பிக்கள் 3000 கேள்விகள் குறைவாக தான் கேட்டுள்ளனர். கண்ணிற்கு தெரியாத காற்றிலும் கூட ஊழல் செய்த ஒரே கட்சி திமுக, அவர்களுக்கு வாய்ப்பு அளித்து நீங்கள் அனுப்பினால் அவர்கள் விஞ்ஞான முறைப்படி தான் ஊழல் செய்வார்கள். அதிமுகவை சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லும்போது தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்