Asianet News TamilAsianet News Tamil

2024ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல்.. குண்டை தூக்கி போட்ட ஈபிஎஸ்…!

2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கும் போது தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆரூடம் கூறி உள்ளார்.

EPS press meet
Author
Salem, First Published Sep 22, 2021, 7:42 PM IST

சேலம்: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்கும் போது தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆரூடம் கூறி உள்ளார்.

EPS press meet

சேலம் மாவட்டம், ஓமலூரில் கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:

அடுத்து வரக்கூடிய 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. 1000 பேர் உட்காரக்கூடிய வகையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதால் எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம்.

EPS press meet

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது சிறப்பானது என்பதால் திமுக அரசும் அதை தொடர்கிறது. எந்த, எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளது என்பது குறித்து முறையான தகவல் இல்லை. முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை அவசியம்.

நீட் தேர்வு ரத்து என்கிற வாக்குறுதியை முதலமைச்சர் இன்னமும் நிறைவேற்றவில்லை. அதிமுக கொண்டு வந்த அதே தீர்மானத்தை தான் திமுகவும் இப்போது கொண்டு வந்துள்ளது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios