Asianet News TamilAsianet News Tamil

ஒற்றை தலைமை தீர்ப்புக்கு பின் அதிரடியாக களத்தில் இறங்கும் இபிஎஸ்.!அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் மார்ச் மாதத்தில் 6 நாட்கள் பொதுக்கூட்டம் நடத்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 

EPS orders AIADMK executives to hold public meeting on Jayalalithaa birthday
Author
First Published Feb 26, 2023, 11:55 AM IST

ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த 23 ஆம் தேதி உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பரிசாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்த சந்தோஷத்தில்  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பிப்ரவரி 24 ஆம் தேதி நாடு முழுவதும் அதிமுகவினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.   இதனையடுத்து அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தாயை இழந்து தவித்த ஓபிஎஸ்..! நள்ளிரவில் வீட்டிற்கே ஓடி சென்று ஆறுதல் சொன்ன சீமான்

EPS orders AIADMK executives to hold public meeting on Jayalalithaa birthday

மார்ச் மாதத்தில் 6 நாள் பொதுக்கூட்டம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் காவல் தெய்வம் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மார்ச் மாதம் 5,6,7 மற்றும் 10,11,12 ஆகிய 6 நாட்கள், 'இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 75-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்', கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. மார்ச் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPS orders AIADMK executives to hold public meeting on Jayalalithaa birthday

சென்னை பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 

அதேபோல், மார்ச் மாதம் 10,11,12 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதன் படி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 5 ஆம் தேதி சென்னை ஆர்கே நகர் பகுதியில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.  எஸ்பி வேலுமணி தொண்டாமுத்தூரிலும்,தங்கமணி குமாரபாளையத்திலும், உரையாற்ற உள்ளனர்.  7 ஆம் தேதி வேலூரில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனும், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வதாந்தனும், ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் உரையாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போலமார்ச் 5,6,7 ஆம் தேதி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   

இதையும் படியுங்கள்

ஒரு மாதமாக முடங்கிய அரசு இயந்திரம்.! குரூப் 2 தேர்வை ரத்து செய்திடுக- திமுக அரசுக்கு எதிராக சீறும் விஜயகாந்த்

Follow Us:
Download App:
  • android
  • ios